CPM- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,தண்டரை கிராம பொதுமக்களும் இணைந்து- “நடைப் பயண போராட்டம்”21-07-2025 வைப்பூர்/தண்டரை அடுக்கம் வரை.
விழுப்புரம் மாவட்ட கடைசி எல்லையிலுள்ள மிகவும் பின் தங்கிய கிராமம்.. தண்டரை

CPM- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,தண்டரை கிராம பொதுமக்களும் இணைந்து- “நடைப் பயண போராட்டம்”21-07-2025 வைப்பூர்/தண்டரை அடுக்கம் வரை.

தண்டரை (ஒட்டம்பட்டு) கிராமம், இயற்கை எழில் சூழ்ந்த கிராமம் பழங்குடி மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மக்கள் வசிக்கும், விவசாயம் சார்ந்த கிராமம்
விழுப்புரம் மாவட்ட கடைசி எல்லையிலுள்ள மிகவும் பின் தங்கிய கிராமம்.. தண்டரை
பழங்குடி மக்களும் இதர வகுப்பைச் சார்ந்த மக்களும் தினசரி பிழைப்புக்களுக்காகவும், இதர பணிகளுக்கு சென்றுவர சாலை அவசியம், சாலைகள் தான் கிராம புறத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவும்/பயன் அளிக்கும் என்பது உறுதி..!
வனத்துறையே! ஊரக வளர்ச்சித் துறையே!!

தண்டரை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை… நீண்ட நாள் கனவு…
தண்டரை – அடுக்கம் இடையே வனத்துறை வழியாக இணைப்பு சாலையினை அமைத்திடுக.
ஏற்கனவே ஒ.தண்டரை-வனத்துறை எல்லைவரை 2.5 கீ.மீ தூரம் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாலையினை நபார்டு திட்டத்தின் கீழ் புதுப்பித்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது-வரவேற்கின்றோம். தரமான சாலையாக அமைத்திடுக.
தண்டரை-அடுக்கம் இடையே இணைப்பு சாலை அமைத்திட காட்டு வழியாக
1.8 கி.மீ துரத்திற்கு மண் சாலையினை, தார் சாலையாக அமைப்பதற்கு வனத்துறையே உரிய அனுமதி வழங்கிடுக.
தண்டரை- ஒட்டம்பட்டு இணைப்பு சாலையினை அமைத்திட வருவாய்த்துறை, துறை மற்றும் வனத்துறையும் ஒருங்கிணைந்து சாலை அமைக்கும் பணிக்கு உரிய கோப்புகள் தயாரித்தும், உரிய மதிப்பீட்டும் செய்து பணியினை நடப்பாண்டில் முடித்திடுக.
ஊரக வளர்ச்சித்துறையே!
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமே!
வைப்பூர்-தண்டரை
சாலையினை (2.0
கி.மீ. தூரம்) தரமான சாலையாக
புதுப்பித்திடுக.
இந்த சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிடுக.
மேற்காரம் கோரிக்கைகளை வலியுறுத்தி..
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- தண்டரை கிராம பொதுமக்கள் இணைந்து
நடைப் பயண போராட்டம்
நாள்: 21-07-2025 திங்கள் காலை 8:00 மணி முதல் வைப்பூர், தண்டரை முதல் அடுக்கம் வனத்துறை & கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் வரை.



