திரை விலகுமா? திருக்கோவிலூர் புதிய பேருந்து நிலையம்,,,,,

திரை விலகுமா? திருக்கோவிலூர் புதிய பேருந்து நிலையம்,,,,,

16/09/2025திருக்கோயிலூர் ஒன்றுபட்ட தென்னற்காடு மாவட்டத்தின் இரண்டாவது தலைநகராக, உற்பத்தி உறவுகளில் இருந்தும், பண்பாட்டு நடவடிக்கைகளில் இருந்தும் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட திருக்கோவிலூர் நகரம் மற்றும் சுற்றி உள்ள பகுதி மக்களின் தேவைகள், அரசின் கடமைகள் என பல அத்தியாவசிய தேவைகள் ஏராளமானவை செய்ய வேண்டி இருக்கிறது

இச்சூழலில் அரசியல் கட்சிகளின் கடமைகளும், பொது மக்களின் கடமைகளும், சமூக ஆர்வலர்களின் கடமைகளும் முதன்மையானவையாகவும், முக்கியமானவகையாகவும் உள்ளதை மறுதலிக்க முடியாது
எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு இந்த காலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான “தமிழக அரசாங்கத்தால்” பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன

1, பேரூராட்சி நகராட்சியாகவும்
2, அரசு கலை அறிவியல் கல்லூரி
3, அரசு தொழில்நுட்பக் கல்லூரி
4, அரசு சிப்காட்
5, தென்பெண்ணை ஆற்று இணைப்பு பாலம்
6, தென்பெண்ணை ஆற்று டேம் கட்டமைப்பு
7, மாவட்ட மருத்துவமனை
8, திருக்கோவிலூர் நகரத்தில் புதிய நவீனமயமாக்கப்பட்ட பேருந்து நிலையம் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு சில பல வேலைகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன – இன்னும் கூட ஆளும் கட்சி ஏராளமான திட்டங்களை சொல்ல முடியும்
இந்நிலையில் “திருக்கோவிலூர் நகரத்தில் புதிய நவீனமயமாக்கப்பட்ட பேருந்து நிலையம்” என்பது பல்வேறு சர்ச்சைகளுக்கும் விவாதங்களுக்கும் சில கிளர்ச்சிகளுக்கும் இடம் ஏற்படுத்தி இருக்கிறது, பேருந்து நிலையம் குறித்து
1, ஆளுங்கட்சி உள்ளிட்ட பொதுமக்கள் இன்னும் பிற அரசியல் கட்சிகள் ஒரு அணியாகவும்
2, சமூக சேவகர் திரு டிஜி கணேஷ் அவர்கள் உள்ளிட்ட இன்னும் பிற அரசியல் கட்சிகள் ஒரு அணியாகவும் குரல் கொடுத்து வருகின்றனர், இவர்களின் குரலை நாம் சமூக ஊடகங்களிலும் இன்னும் பிற ஊடகங்களிலும் கண் உற்றுநோக்கினால் – நமக்கு மட்டுமல்ல எல்லா நியாயவான்களுக்கும் இரண்டு கேள்விகள் எழுகின்றன
1,புதிய நவீனமயமாக்கப்பட்ட பேருந்து நிலையம் எப்படி அமைய வேண்டும் என்பது தேவையா
2, அல்லது புதிய நவீனமயமாக்கப்பட்ட பேருந்து நிலையம் எங்கு அமைய வேண்டும் என்பது தேவையா
எது எப்படி ஆயினும் இந்த இரண்டு கருத்திலும், தனிப்பட்ட முறையிலும், பொதுவாகவும் பயனடைய போகிறவர்கள் யார் என்பதை இரண்டு அணிகளின் செயல்பாடுகளில் இருந்து ஆய்வு மேற்கொண்டோமேயானால் அறிய முடிகிறது

புதிய நவீனமயமாக்கப்பட்ட பேருந்து நிலையத்தின் தேவை என்பது, தற்போதைய நகரத்தின் பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலும், பைபாஸ் சாலையை எளிதாக இணைக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பது பொது மக்களின் தேவை என்பது அனைத்து பொதுமக்களின் அபிப்பிராயம், அன்றாட பயணம் மட்டுமல்ல அத்தியாவசிய பயணம் மேற்கொள்ளும் பொது மக்களின் அபிப்பிராயமும் கூட என்பது பேர்உண்மை
இதுகுறித்து மேற்கண்ட இரு அணிகளின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை இல்லை என்பதை அவர்களின் செயல்களில் நாம் அறிய முடிகிறது,
பொதுமக்களின் வளர்ச்சி பணிகளுக்கு சுடுகாடு என்ன இடுகாடு என்ன ஆறு என்ன ஏரி என்ன வளர்ச்சி பணி தான் முக்கியம், அது பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடிய வகையில் அமைய வேண்டும் என்பது தான் முக்கியம் – வேண்டாம் என்றால் மாற்று எது? அதை தெளிவுபடுத்துவதில் இரண்டாம் அணியினுடைய திரை விலகவில்லை
பொதுமக்களின் நலன்களுக்காகத்தான் வளர்ச்சி பணிகளை கொண்டு வருகிறோம் என்றால், இப்பணி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் எப்படி அமையவிருக்கிறது என்ற விபரத்தை திரைவிளக்கி பொதுமக்களிடத்திலே பிரகடனப்படுத்த வேண்டிய ஆளும் கட்சி அணி திரை விலகாமல் இருப்பது ஏன்?
தமிழகம் முழுவது மட்டுமல்ல இந்தியா முழுவதும் இரு அணிகளாக அரசியல் கட்சிகள் அணிவகுத்து நிற்கும் பொழுது, இந்தயா கூட்டணியில் உள்ள தமிழகத்தில் திமுகவின் தலைமையிலான கூட்டணி கட்சிகளில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சில பிரமுகர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சில பிரமுகர்களும், ஆளுங்கட்சிக்கு எதிரான கட்சியுடன் அணி சேர்ந்து நிற்பதின் அரசியல் என்ன?
ஆளுங்கட்சிக்கு எதிராணியில் சமூக சேவகர் திரு டிஜி கணேஷ் அவர்கள் ஒருங்கிணைப்பு முன்னெடுப்பு என இருந்தாலும் கூட, இந்த களத்தை அண்ணா திமுகவும் பிஜேபியும் நன்கு பயன்படுத்துகின்றன,
தமிழகம் முழுவதும், இந்தியா முழுவதும் மட்டுமல்ல பிரபஞ்சம் முழுவதும் மக்கள் பிரச்சினைகளை உரக்க பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மௌனித்து கிடப்பதின் மர்மம் என்ன?
திருக்கோவிலூர் என்னும் நிலப்பரப்பின் உற்பத்தி உறவுகள், பண்பாடுகள் சிதைக்கப்பட்டு சிதைந்து கிடக்கின்றன – ஒப்பனை செய்வதல்ல ஒருங்கிணைக்க வேண்டியதும் ஒற்றுமைப்படுத்த வேண்டியதும் ஏராளமான கடமைகள் உள்ளன
இதில் இன்னும் பல அரசியல் கட்சிகளின் நிலை? தொடரும் இச்சண்டை எதை முன்னிட்டு – கள ஆய்வில் அடுத்து சந்திப்போம்




