அரசியல்

2026 ல் மீண்டும் திமுக ஆட்சி அமைய விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும் என திருமாவளவன் சபதம்-திமுகவுடன் கூட்டணி.. கொத்து கொத்தாக குவிய போகும் வாக்குகள்.. அரசியலில் புதிய திருப்பம். குஷியில் முதல்வர் ஸ்டாலின்..!

2026 ல் மீண்டும் திமுக ஆட்சி அமைய விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும் என திருமாவளவன் சபதம்-திமுகவுடன் கூட்டணி.. கொத்து கொத்தாக குவிய போகும் வாக்குகள்.. அரசியலில் புதிய திருப்பம். குஷியில் முதல்வர் ஸ்டாலின்..!

2026 ல் மீண்டும் திமுக ஆட்சி அமைய விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும் என திருமாவளவன் சபதம்-திமுகவுடன் கூட்டணி.. கொத்து கொத்தாக குவிய போகும் வாக்குகள்.. அரசியலில் புதிய திருப்பம். குஷியில் முதல்வர் ஸ்டாலின்..!

ஜூலை 15 /2025 

இன்று சிதம்பரம் லால்குளத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் மறைந்த எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவு மண்டபம் திறப்பு நடைபெற்றது.

அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நூற்றாண்டு மண்டபத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் ‘திருமாவளவன் எம்.பி.’ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருமாவளவன்:

அப்போது விழாவில் திருமாவளவன் தெரிவித்ததாவது,”சிதம்பரத்தில் நந்தனாருக்கு மணிமண்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட எல்.இளையபெருமாளுக்கு நூற்றாண்டு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. கல்வி வளர்ச்சிக்காக நந்தனார் பாடுபட்டார்.

காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சிநாளாக கொண்டாடப்படும் இந்த நாளில் எல். இளையபெருமாளுக்கு மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எல்.இளையபெருமாள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டு அறிக்கை வெளியிட்டார்.1931-ம் ஆண்டு மக்கள் தொகையில் ஒன்றரை சதவீதம் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி வளர்ச்சி பெற்று இருந்தனர்.

தற்போது 78 சதவீதம் பட்டியலின மக்கள் கல்வி வளர்ச்சி பெற்றுள்ளனர். திராவிட மாடல் ஆட்சி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தார். அதே போல் தற்போது தி.மு.க. அரசும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

மீண்டும் தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும். தமிழர்கள் ஓரணியில் திரள்வோம். 2026-ல் தி.மு.க ஆட்சி அமைய அனைவரும் ஒத்துழைப்போம்.தி.மு.க. கூட்டணிக்கு விழும் வாக்குகளில் 4-ல் ஒரு வாக்கு வி.சி.க.வுடையதாக இருக்கும். அதாவது 100 வாக்குகளில் 25 வாக்குகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி உரியதாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்தில் மீண்டும் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று திமுக தலைமை ஒரு பக்கம் சிந்தித்து கொண்டு இருக்க மறுப்பக்கம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான வேலைகளை செய்து வருகின்றார். இவர்களுக்கு இடையே தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் புதிய ஆட்சியை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். என்னதான் மற்ற கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருந்தாலும் திமுகவின் கூட்டணி என்பது பலமாக உள்ளது. அதனால் மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நம்பிக்கையில் முதல்வர் ஸ்டாலின் உள்ளார்.

இந்நிலையில் மீண்டும் திமுக ஆட்சி அமைய விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும் என திருமாவளவன் சபதம் எடுத்துள்ளார். இது தொடர்பாக சிதம்பரத்தில் பேசிய அவர், 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணிக்கு விழும் கொத்து கொத்தான வாக்குகளில் 25 சதவீதம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வாக்குகளாக இருக்கும் என்றார். அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பல கருத்துக்கள் இணையத்தில் வளம் வந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து கூட்டணியை திருமாவளவன் உறுதி செய்துள்ளார்.

திமுகவுடன் கூட்டணி.. கொத்து கொத்தாக குவிய போகும் வாக்குகள்.. அரசியலில் புதிய திருப்பம்… குஷியில் முதல்வர் ஸ்டாலின்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button