நரிக்குறவர் என்னும். “குருவிக்காரர்” இன மக்களின் வாழ்வியல்!! இன வரைவியல்!!!
நரிக்குறவர் என்னும். "குருவிக்காரர்" இன மக்களின் வாழ்வியல்!! இன வரைவியல்!!!

நரிக்குறவர் என்னும். “குருவிக்காரர்” இன மக்களின் வாழ்வியல்!! இன வரைவியல்!!!
நிராயுதபாணிகள் மீது தொடுக்கப்பட்ட போரில்,,,,,
செங்கொடி இயக்கம் என்னும் ஆயுதத்தால் பெறப்பட்ட வெற்றியில் இருந்து,,,,
தோழர் ARK,தமிழ்ச்செல்வன் BA(P-A).DTJ.,BA,. LL.B.,. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்). helloindianewstamil. com- செல், 9445102867 –
January 20, 2023. குருவிக்காரர் என்னும். ” நரிக்குறவர் இன மக்கள் வாழ்வியல்-இனவரவியல் “
இனவரைவியல் (Ethnography) என்பது, கள ஆய்வுகளின் அடிப்படையில், மனித சமூகத் தோற்றப்பாடுகள் தொடர்பான பண்புநிலை விளக்கமாக அமையும் ஒருவகை எழுத்தாக்கம் ஆகும். தனிப்பட்ட இனக்குழு அல்லது மக்களைப்பற்றி எழுதுவது இனவரைவியல் எனலாம். ஒரு முறைமையின் பகுதிகளைத் தனித்தனியாக அணுகுவதன்மூலம் அம்முறைமையை அச்சொட்டாகப் புரிந்து கொள்ள முடியாது என்ற எண்ணக்கருத்தின் அடிப்படையில் உருவான ஒரு முழுதளாவிய ஆய்வு முறையின் விளைவுகளை இனவரைவியல் முன்வைக்கிறது.
இனக்குழுபற்றிய முழுமையான ஆய்வு என்பதனால் இதனை இனக்குழுவியல் என்றும் குறிப்பிடலாம். இது, பயண எழுத்தாக்கம், குடியேற்றவாத அலுவலகங்களின் அறிக்கைகள் ஆகியவற்றுடன் முறைசார்ந்ததும்,வரலாற்றுரீதியானதுமான தொடர்புகளைக் கொண்டுள்ளது. ஆரம்பகாலத்தில், பயணிகளும், புத்தாய்வாளரும், சமயம் பரப்புவதில் ஈடுபட்டிருந்த குருமாரும், குடியேற்றவாத அலுவலருமே இனக்குழுக்களைப் பற்றிய செய்திகளைத் தொகுத்தனர்.
வரலாறுகள் அனைத்தும் திரிக்கப்பட்டு ஒருவர் மீது ஒருவர் வன்மத்தை ஏவி விடும் வக்கிர சிந்தனைகளுக்கும் முடிவு கட்ட வேண்டும், அதே சமயத்தில் வரலாற்றை முன்வைக்க வேண்டும் என்ற முறையில் மக்கள் ஒற்றுமை என்ற சிந்தனைக்கு ஓர் முன் கட்டியமாய் மானுட சமூகத்தின் சிந்தனைக்கு,,,,,
ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டத்தில் கடலாடி எல்லையான வானூரிலிருந்து, சங்க பணி முடித்து, குறிஞ்சிக்கும் கடலாடிக்கும் இடைப்பட்ட மருத நில பகுதியான பாரியின் நண்பன் கனல் புகுந்த கபிலன் நினைவைக் கொண்டு நிற்கும் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள அறம்கண்டநல்லூர்,எங்கள் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் உள்ளே சென்று உணவருந்தி கொண்டிருந்த வேலையில் கதவுகள் தட்டப்பட்டு, தோழர் தோழர் என்ற குரல் வந்ததன் பொருட்டு நான் கதவை திறந்து பார்த்தத்தில், தோழர் சங்கர் அவர்கள் சுமார் 40 ஆண்கள் பெண்களுடன், குழந்தைகளுடன் என்னை அதிர்ச்சி மாறாமல் பார்த்து, தோழர் அந்தப் பாவிங்க ஜேசிபியோட எங்க ஊடுங்கள இடிக்க வந்துட்டானுங்க, என்ன பண்றதுன்னு தெரியல சாமி, இந்தப் பாவிங்க எங்கள வாழ வுடமாட்டனுங்க போலிருக்கு, அந்த வாக்கரிபோலியும் சும்மா இருக்கிறா, என்னதான் தோழர் பண்றது, வாங்க தோழா என்றவர்களுடன், இயந்திரகதியில் அவர்களின் குடியிருப்பு பகுதி உள்ள அந்திலி மேட்டிற்கு சென்று பார்த்தது சினிமாவையும் தாண்டி நின்ற காட்சி, அவர்களின் குடியிருப்பை சுற்றி மூன்று மூலைகளில் ஜேசிபி இயந்திரங்கள் இருளை பகலாக்கும் ஒலியுடன் ஆன் செய்யப்பட்ட நிலையில், ஒரு மூலையில் ரியல் எஸ்டேட் மாபியா கும்பலும், அவர்களின் அடியாட்களும், நாங்கள் தாமதிக்காமல் அனைவரும் அரகண்டநல்லூர் காவல் நிலையம் சென்று, அதிகாரிகளிடத்தில் புகார் மனு கொடுத்து, நடந்தவைகளை விளக்கி கூறினோம், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு எங்களுடன் வந்து, எதுவானாலும் சட்டப்படி அணுக வேண்டுமென எதிர் தரப்பாருக்கு அறிவுறுத்தி அவர்களை விரட்டி அனுப்பினார்கள் , நாங்கள் இரவு முழுவதும் அக் குடியிருப்பு பகுதியிலேயே காத்து கிடந்து கார் இருள் கடந்து, செவ்வானம் வந்து பரவியது, குருவிக்காரர்கள் குடியிறுப்பு மண்ணை காக்கும் செயல்பாடுகளை விறைவுப்படுத்தும் வேலையில் இறங்கினோம், எதிர்காலம் பல அசாத்தியங்களை சாத்தியமாக்க
கட்டியங்களை கூறப்போகிறது என்பதை கடந்து,,,,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்
ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டத்தின் நிர்வாகி என்ற முறையில், இளைஞர்களின் கல்வி வேலை உரிமைக்காகவும், மறுக்கப்பட்ட மானுடம் மாண்புகளான பின்னுக்கு தள்ளப்பட்ட இளைஞர்களையும் அப்பகுதியை சேர்ந்த மக்களையும், அவர்களின் முன்னேற்றத்திற்காக திரட்டுவது என்ற முறையில், அமைப்பின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்ல ஒன்றுபட்ட மாவட்டம் முழுவதும் இருந்த மலைவாழ் இளைஞர்களையும், நரிக்குறவர் இன மக்களையும் திரட்டினோம் அவர்களின் உரிமைகளை பெற்றுத் தந்திடும் பொறுட்டு, அந்த வகையில் அவர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அவர்களோடு உறவாடிய பின்பு தான் ஆட்சியாளர்கள் சொல்லும் வளர்ந்த இந்தியாவுக்கும் அவர்களுக்குமான வித்தியாசம், தரைக்கும் வானுக்கும் என்ன ஏணி தேவை என்ற எண்ணங்கள் நமக்கு ஏற்பட்டது, அதன் தொடர்ச்சியாகத்தான் அம்மக்களிடத்திலே ஆய்வுகளை மேற்கொண்டு, நரிக்குறவர் இன மக்களுக்கு பேருந்திலும் ரயிலிலும் பயணம் செய்யும் உரிமையை மறுக்கக்கூடாது, எனக்கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 24 மணி நேர உண்ணாவிரதத்தை 2005 ல் மேற்கொண்டோம், தோழர்கள் எம்,செந்தில், வழக்கறிஞர் ஆர் கண்ணப்பன்,வைகுந்தவாசன்,ராஜீவ்காந்தி,நாகராஜ்,
கோலியனூர் ராஜா, இவர்களின் கூடுதல் களப்பணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் திறன்டனர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவருமான தோழர் எஸ் கே, மகேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு அமைப்பின் ஆய்வு அடிப்படையிலான நரிக்குறவர் இன மக்களின் கோரிக்கை சாசனத்தையும், மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் இம்மக்களின் மானுட மாண்புக்கான திட்டமிடலையும் முன்வைத்து முழங்கினார்,
இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில தலைவரும், விக்கிரவாண்டி சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான தோழர் ஆர், ராமமூர்த்தி வழக்கறிஞர் அவர்களும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாவட்ட செயலாளர் தோழர் ஜி,ஆனந்தன் அவர்களும் கண்டன உரை நிகழ்த்தினார், மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து நரிக்குற இன மக்களின் பேருந்து, ரயில் பயணத்திற்கு யார் இடையூறு ஏற்படுத்தினாலும் வழக்கு பதிவு செய்யப்படும் என அறிவிப்புச் செய்தார்,
இக்களப்பணியின் தொடர்ச்சி, நான் வாழும் பூர்வீக கிராமமான
அறம்கண்டநல்லூர் ரயில் நிலையம் அருகில் சுமார் 50 குடும்பங்களாக வசித்த நரிக்குறவர் இன மக்கள், 1962 ல் இக்கிராமத்தை ஒட்டிய அந்திலி வருவாய் கிராமத்தில் சர்வே எண் 62/7 ல் 90 சென்ட் அளவுக்கு அரசின் இலவச குடிமனை வழங்கப்பட்டு, சாலை தெருமின் விளக்கு, குடிநீர், இலவச வீடுகள் வழங்கப்பட்டு, அம்மக்கள் வரிகள் செலுத்தி நிரந்தரமாக நிலையாக தலைமுறை தலைமுறையாக வசித்து வந்தனர், இந்திய நிர்வாக அமைப்பியலின் துயரம், இம்மக்களின் வாழ்வியலை நெருக்கியது, இம்மக்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்ட இலவச குடிமனை பட்டா வருவாய் கிராம கணக்கில் ஏற்றப்படாததால், இம்மக்களின் குடியிருப்பை ஒட்டிய ரைஸ் மில் ஓனர் தன் அதிகாரம் செல்வாக்கை அரசியலை பயன்படுத்தி, இம்மக்களுக்கு வழங்கப்பட்ட 90 சென்ட் உள்ளிட்ட அப்பகுதி அரசுக்கு சொந்தமான இடங்களை தனது பெயருக்கு மோசடியாக பட்டா பெற்றுக் கொண்டு அவைகளை ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் விற்று, ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் மாபியா கும்பலும் நரிக்குறவர் இன குடும்பங்களை அங்கிருந்து காலி செய்ய சொல்லி நெருக்கி வந்தது, இந்த அபாயகரமான சூழலில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இம் மக்களோடு இருந்து மக்களின் உரிமைகளை அரசு வருவாய் துறை காவல் துறை, பத்திர பதிவுத்துறை விஷயத்தில் தலையீடு செய்தது,
நாகரிக சமூகம் என்பது விழுந்தவனையும் எழுப்பி அரவணைத்து தம்மோடு நடத்தி பயணிப்பதே என்ற மானுட மாண்புமிக்க கோட்பாட்டின் அடிப்படையில் நரிக்குறவர் என்னும் குருவிக்காரர் மக்களின் வாழ்வியலையும், இந்திய சமூகத்தில் குறிப்பாக தமிழ் சமூகத்தில் நாம் முன்னெடுக்க வேண்டியது வரலாற்றுக் கடமைகள் என்ற முறையி கிராம கணக்கில் நரிக்குறவர் இன மக்களின் குடும்பங்களின் பட்டாக்களை பதிவு செய்திடவும், நம் மக்களை பாதுகாத்திட வேண்டும் என கேட்டு அனைவரிடத்திலும் கையெழுத்து இயக்கம் நடத்தி, அரசின் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகள் உடைய கவனத்திற்கு நேரடியாக கொண்டு சென்று மூன்று கட்ட போராட்டங்களையும் நடத்தினோம், விளைவு திரு,சாருஸ்ரீ, ஐஏஎஸ் அவர்கள் மூன்று நாட்களாக இப்பகுதியில் தங்கி இருந்து முழு இடத்தையும் அளவை செய்து, நடந்த குற்றங்களை கண்டுபிடித்தும், நரிக்குறார் மக்களின் பெயர்களை கிராம கணக்கில் ஏற்றிடவும் பைல் தயார் செய்தார்கள்,
இந்நூலை நிறைவாக கணினி தட்டச்சு
செய்து கொண்டிருக்கும் 19/01/2023 வரையிலும் கூட இந்திய நிர்வாகவியலின் செயலாக்க முறையிலான துயரம் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது, தொண்டைக் குழி நீர் எடுத்துத்தான் இவ்வெழுத்துக்களை பதிவு செய்கிறேன். இப்பணியின் தொடர்ச்சியாக, இம்மக்களின் உறவுகளோடும்,பண்பாட்டோடவும், பழக்க வழக்கங்களோடும், தொழில் முறைகளோடும் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
அதன் பொருட்டே இப் பதிவுகளை, மானுட மனசாட்சியின் சமூகத்திற்கு மண்டியிட்டு முன்வைத்திடும்
நரிக்குறவர் என்னும் “குருவிக்காரர் இன மக்கள் வாழ்வியல்- இனவரைவியல்” என்ற நூல் தங்கள் கரங்களில்
போருக்கு சாதி,இனம், மதம்,மொழி,சகோதரத்துவம் எதுவும் கிடையாது ஆனால் அதனால் ஏற்படும் இன்னல்கள் ஏராளம் ஏராளம் என்பதற்கு ஏராளமான சம்பவங்கள் வரலாற்றில் குவிந்து கிடக்கின்றன
நாடுகளுக்கிடையேயான மோதல் மதவெறி, அதிகாரத்திற்கான போராட்டம் அல்லது பழிவாங்கும் மனப்பான்மை ஆகியவற்றில் வேரூன்றியுள்ளது போர்கள் அமைதியைக் கொண்டு வருவதில்லை
அன்னைத் தமிழ் நாட்டில் திருப்புத்துரர் என்ற ஊர் இருக்கிறது. அங்கிருந்து சில மைல் தூரத்தில் பிரான்மலை என்ற மலையும் அந்தப் பெயரோடு ஓர் ஊரும் உள்ளன. சங்க காலத்தில், அந்த மலைக்குப் பறம்பு மலை என்ற பெயர் வழங்கிவந்தது. அங்கேதான் பாரி என்னும் வள்ளல் வாழ்ந்துவந்தான். பாரிவேள் வீரத்திலே சிறந்தவன், பண்பிலே நிறைந்தவன், தமிழ்ப் பாவின் நயம் தேர்வதில் பெரியவன், எல்லாவற்றிற்கும் மேலாகக் கொடையிலே இணையற்றவன். பாரி என்றவுடன் முதலில் அவனுடைய ஆட்சி நினைவுக்கு வருவதில்லை, அவன் வீரம் நினைவுக்கு வருவதில்லை, அவனுடைய வள்ளன்மையே மக்களின் உள்ளத்திலே தோன்றியது.
பாரி சிறிய நாடு ஒன்றுக்குத் தலைவன். வேளிர் பலர் அக்காலத்தே அங்கங்கே இருந்தார்கள். அவருள் ஒருவன் அவன். அவனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டுக்குப் பறம்பு நாடு என்று பெயர். பறம்பு மலையை நடுவே உடையதாக விளங்கியமையால் நாட்டுக்கும் பறம்பு என்று பெயர் அமைந்தது. அந்த நாட்டில் முந்நூறு ஊர்கள் இருந்தன.
அந்தக் காலத்தில் பறம்பு மலை நல்ல வளமுடையதாக இருந்தது. எங்கே பார்த்தாலும் மரங்கள் அடர்ந்திருந்தன. பலாமரங்கள் குலைகுலையாகப் பழங்களுடன் நின்றன. மரத்துக்கு மரம் தேன் கூடுகள் அடை அடையாக இருந்தன. மலைப்பாறைகளிலும் பெரிய பெரிய தேனிருல்கள் தேனை ஊற்றுப்போல ஒழுக விட்டுக்கொண்டு பரந்திருந்தன. வண்ணவண்ண மலர்கள் காணக் காண இனியனவாய் மலர்ந்திருந்தன. மலைப் பாறைகளில் அருகருகே பல சுனைகள் தெளிந்த நீரோடு விளங்கின. மலைவளம் சிறந்திருந்த பறம்பு மலையில் ஓரிடத்தில் பாரி சிறிய அரண்மனையைக் கட்டிக்கொண்டிருந்தான். வேறு ஓரிடத்தில் சிவபெருமானுக்குரிய கோயில் இருந்தது.
எத்தனையோ புலவர்கள் அவனிடம் வந்து வந்து அவனுடைய உபசாரத்தையும் விருந்தையும் பெற்று அளவளாவினர்கள்; அவனுடன் இருந்து தமிழ் நூல்களின் நயத்தை நுகர்ந்தார்கள்; அவனுடைய சிறப்பைப் புதிய பாடல்களால் பாடினர்கள்; விடை பெற்றுச் செல்லும்போது மன நிறைவையும், உவகையையும், நன்றியறிவையும், பலவகைப் பரிசில்களையும் தாங்கிச் சென்றார்கள். புலவர்களுக்கு அவன் உணவு தருவான்; உடை தருவான்; பொருள் தருவான். ஒர் ஊர் முழுவதையும் புலவருக்கு அளித்து அதில் வருகின்ற வருவாயை நுகரும்படி செய்வான்.
யாரேனும் புதிய புலவர் ஒருவருடைய பழக்கம் அவனுக்குக் கிடைத்தால் அதைப் பெரும் பேருகக் கருதி இன்புற்றான்; ஏதோ புதிய நாட்டைப் பெற்றவனைப் போன்ற களிப்பை அடைந்தான்.
காட்டுக்கு நடுவே பாரியின் உள்ளத்தைக் கனிவித்த முல்லைக் கொடி, வேறு எதற்கும் இல்லாத சிறப்புடன் பந்தலில் படர்ந்தது. பாரி முல்லைக்குத் தேர் கொடுத்தான் என்ற வியப்புக்குரிய செய்தி தமிழுலகம் முழுவதும் படர்ந்தது. புலவர்கள் புகழ்ந்தனர்; மன்னர்கள் பாராட்டினர்கள். அன்று முதல் ‘முல்லைக்குத் தேர் அளித்த வள்ளல்’ என்று யாவரும் பாரியை வழங்கலானார்கள்.
பாரிக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். அழகும் அறிவும் நிரம்பின அவர்களுக்குக் கபிலர் தமிழறிவு ஊட்டினார். பாரியினிடம் வந்த புலவர்கள் அவ்விருவருடைய அறிவையும் கண்டு வியந்தார்கள். அவர்கள் போகும் இடங்களிலெல்லாம் பாரியின் புகழோடு அவனுடைய பெண்களின் புகழையும் பரப்பினார்கள். பாண்டிய மன்னனுக்குப் பாரி மகளிரின் பெருமை தெரிந்தது. அவர்களை மணந்துகொண்டால் பாரியின் உறவும் கிடைக்கும் என்று எண்ணினான். அவனுக்கு முன்பே மணமாகியிருந்தது; பட்டத்தரசி ஒருத்தி இருந்தாள். பல பெண்களை மணப்பது மன்னர்களின் வழக்கமாக இருந்ததால் அவனுக்குப் பாரி மகளிரின்மேல் விருப்பம் உண்டாயிற்று.
அவன் பாரிக்கு ஓலை போக்கினான். இரு பெண்களையும் தனக்கு மணம் புரிவிக்க வேண்டுமென்று ஓலை கூறியது. பாரி அதைக் கண்டவுடன் சினந்தான். அவன் மகளிராகிய அங்கவை சங்கவை என்னும் இருவரும், “அரசர் அந்தப்புரத்தில் நூறு பேரோடு சேர்ந்து நாங்கள் வாழ விரும்பவில்லை” என்று தெரிவித்தார்கள். வந்த தூதுவன் மறுப்புடன் மீண்டு சென்றான்.
பாரியின் புகழைக் கேட்டுப் பொறாமை அடைந்திருந்தான் பாண்டியன். ஆகவே அவன் தன் மகளை மணம் செய்து தர மறுத்ததையே காரணமாக வைத்துக்கொண்டு அவனோடு போர் தொடுக்க எண்ணினான். இந்தச் செய்தி சோழனுக்கும் சேரனுக்கும் எட்டியது. அவர்களும் பாரியின் மேன்மையை உணர்ந்து பொறாமை கொண்டவர்களே. அவர்களுக்கும் பாரியை அடக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. காரணம் இல்லாமல் அவன் மேல் போர் தொடுக்கலாமா? பாண்டியன் செய்த காரியத்தையே அவர்கள் செய்தார்கள். தனித்தனியே பாரியின் மகளிரை மணக்க வேண்டுமென்று தூது விட்டார்கள்; மறுப்பே விடையாக வந்தது.
பாரியை வெல்லவேண்டும் என்ற கருத்துத் தமிழ் நாட்டில் முடியுடை வேந்தர்களாக விளங்கிய மூவருக்கும் உண்டாகிவிட்டது. அவர்கள் ஒன்றுகூடி அவனோடு போர் செய்யத் தமக்குள் ஆலோசனை செய்தார்கள் போர் முரசு கொட்டினார்கள்.
மூவேந்தர்கள் பாரியை போரிட்டு வெல்ல முடியாமல், சூழ்ச்சியால் படுகொலை செய்தார்கள்
இச்சம்பவம் இடைச் செருகல் அல்ல
போர்களுக்கான படிப்பினை என்ற முறையில் நம் மண்ணிலிருந்தே, சூழ்ச்சியால் விழுந்தவனும், கோழைத்தனமாய் வீழ்த்தியவனும் வெவ்வேற? எதில் வேறு?
ஒரு சிறிய, பழைய பிரச்சினை கூட ஒரு பெரிய போராக உருவாகலாம், வல்லரசுகளை உள்ளடக்கிய மற்றும் முழு உலகத்தையும் பாதிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. உலகம், ஒரு பெரிய அணுசக்தி கையிருப்புடன், ஒரு தூள் கிடங்காக மாறிவிட்டதால், ஒவ்வொரு விவேகமுள்ள மனிதனும் போரை சமூகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
நம் பாரதி பாடினானே 1917 ல் ஆஹா எழுந்தது பார் யுகப் புரட்சி என்று,அந்த மகத்தான புரட்சியை படைத்திட்ட சோவியத் ரஷ்யா போருக்கு முன்னுரிமை கொடுக்காமல் நாட்டின் வளர்ச்சிக்கும், பிற நாடுகளின் முன்னேற்றத்திற்கும் முன்னுரிமை கொடுத்து பாடுபட்டது என்பதை வரலாற்றில் நாம் அறிகிறோம்
“போர்கள் மனிதர்களின் மனதில் பிறக்கின்றன” என்று கூறப்படுகிறது.இந்திய மன்னன் அசோகரைப் போல் – போர்களால் ஏற்படும் துன்பங்களைத் தங்கள் மனங்களில் முதலிடத்தில் வைத்திருந்தால், நாடுகள் நல்லிணக்கம் மற்றும் அகிம்சையின் பாதையில் செல்லும். இன்று, அமைதியின்மை என்பது, இராணுவ மேன்மைக்கான பந்தயத்திற்கு நாடுகளை இட்டுச் செல்லும் காரணிகளின் பின்னால் உள்ள உண்மையை உணர மனிதகுலத்தின் இயலாமையின் விளைவு, ஆயுதங்களைக் கட்டமைத்தல் மற்றும் பிற மக்களையும் பிரதேசங்களையும் அடிபணியச் செய்கிறது. இவை மதவெறி, அதிகாரத்திற்கான போராட்டம் அல்லது பழிவாங்கும் மனப்பான்மை ஆகியவற்றால் இயக்கப்படுகின்றன. அதிகார மோகத்தால் மனிதன் மகிழ்ச்சியை ஏமாற்றிக் கொள்கிறான். தன் மனதை ஆளும் சக்தி இல்லாத ஆயுத பலமோ பண பலமோ சுத்த தீமை என்பதை எளிதில் மறந்து விடுவது பரிதாபம். மேலும், ஒருவரின் உடல் உணர்வுகளை ஆளும் சக்தியில்லாத அரசியல் அதிகாரம், மனித நலனுக்காக அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், கொந்தளிப்புக்கு வழி வகுக்கும் என்பதை மனிதன் உணரவில்லை. மனித இனத்தின் நீடித்த மகிழ்ச்சி மற்றவர்களை ஆதிக்கம் செலுத்தும் சக்தியை சார்ந்தது அல்ல, மாறாக அவனது பேய்த்தனமான குணாதிசயங்களின் மீது அவனுடைய தேர்ச்சியைப் பொறுத்தது. எனவே, வெறுப்பு, கோபம், போர் ஆகிய பேய்களை அன்பு, உலக சகோதரத்துவம் என்ற ஆயுதங்களைக் கொண்டு கொல்லாவிட்டால், பேய்கள் மனித குலத்தைக் கொன்றுவிடும் என்பதை மனிதன் திறம்பட நினைவூட்ட வேண்டும்,
குருவிக்காரர் மக்களின் இன்றைய வரையிலான வாழ்வியலிலும் நாம் கண்ணுற வேண்டியது இதைத்தான்
நரிக்குறவர் என பொதுவழக்கில் அழைக்கப்படும் அக்கிபிக்கி,வாக்ரிகள் என்ற மக்கள், தமிழ்நாட்டில் வந்தேரி நாடோடி சமூகத்தினர் என அறியப்படுகின்றனர், இப்பார்வை நேர்மையற்றது
1947 இல் இந்தியப் பிரிவினைக்கு முன், இந்தியாவில் “சொந்த மாநிலங்கள்” என்றும் அழைக்கப்படும் சுமார் 584 சமஸ்தானங்கள் இருந்தன,
ஆங்கிலேயர்கள் இந்தியாவை சிவப்பு நிறத்திலும், சமஸ்தானங்கள் பச்சை நிறத்திலும் ஆட்சி செய்தனர்,
இப்படியான இந்தியாவில் உள்ள மாநிலங்களை சேர்ந்த மண்ணின் மைந்தர்களும்
கணியன் பூங்குன்றனாரின் புகழ்பெற்ற ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற
உண்மை வரிகளுக்கு வாரிசுகளான
இவர்கள் கர்நாடகத்தில் ஹக்கிபிக்கி என்றும் ஆந்திராவில் நக்கவாண்டோ என்றும் அழைக்கப்படுகின்றனர், குருவிக்காரர்கள், நரிக்குறவர்கள் என்று சமூகத்தால் இழிவாகப் பார்க்கப்படும் நாடோடிக் கூட்டத்தினர், தங்களை நறிக்குறவர்கள் என்றும் அழைத்துக் கொள்கின்றனர், இவர்கள் பேசும் மொழி ‘வாக்ரி போலி’. ‘ வாக்’ என்றால் மராத்தியில் ‘புலி’ என்று பொருள்; ‘வாக்ரி’ என்றால் ‘புலி இனத்தவர் என்றும் பொருள். மொழியடிப்படையில் மக்களை அடையாளப்படுத்தும் மரபின்படி இச்சமூகத்தை ‘வாக்ரிகள்’ என்றழைப்பதே மிகப் பொருத்தமாக இருக்க முடியும். இனி பிறர் சொல்லுமிடத்தைத் தவிர்த்து நாமும் இவ்வாறே பயன்படுத்துவோம். வாக்ரிகள் ஆரவல்லி மலைப்பகுதி, குஜராத், மேவார் ஆகிய பகுதிகளிலிருந்து நாடோடிகளாக தமிழகம் வந்தவர்கள். இவர்களது இனப்பிரிவுகள் அவற்றை உணர்த்துகின்றன. எருமைகளைப் பலி கொடுக்கும் குதிரத்தோ, சோகன், சேளியோ என்ற பிரிவுகளும் ஆடுகளைப் பலியிடக் கூடிய மேவாடோ, ஃடாபி என்னும் பிரிவுகளும் வாக்ரிகளில் உள்ளனர்.
இந்திய பெருங்கண்டத்தில் பல நிகழ்வுகளில் ஒன்றான, வீரசிவாஜி தனது படையெடுப்புகளின் மூலம் பரந்த நிலப்பரப்பையும், பொருட் செல்வத்தையும் பெற்றார். இவர் இந்திய ஆட்சியாளர்களில் ஒருவர் ஆவார். இவர் சத்திரபதி சிவாஜி மகாராஜா என்றும் அழைக்கப்படுகிறார். இவர் மராத்தியப் பேரரசின் தொடக்கமாக 1674ஆம் ஆண்டு அலுவல்ரீதியாகத் தனது நிலப்பகுதிகளுக்குச் சத்திரபதியாக இராய்கட் கோட்டையில் முடிசூட்டிக் கொண்டார்,
மராட்டிய சிவாஜியின் படை வீரர்களாக இருந்த வாக்ரிகள், மொகலாயர்களுடன் ஏற்பட்ட போர்த் தோல்வியால் 100 – 150 ஆண்டு காலம் மொகலாயர்களுக்கு அடிமைச் சேவகம் செய்து, பின்பு அதனை மறுத்து காடுகளில் நாடோடிகளாக வாழத் தொடங்கியவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

வாக்ரிகளின் கலாச்சாரத்தை இந்து மதக் கலாச்சாரம் என்றோ அல்லது இஸ்லாமிய எதிர்ப்புக் கலாச்சாரம் என்றோ முடிவு கட்ட முடியாது. இவர்கள் மைய நீரோட்ட இந்துப் பண்பாட்டிலிருந்து முற்றிலும் விலகிய நாடோடிக் கலாச்சாரத்தைக் கொண்டவர்கள்.
இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப இம்மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டமிடுதலை கூடுதலாகுவதற்கு பதிலாக, இவர்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக நிறுத்துவதும், இந்துப் பேரடையாளத்தை இவர்கள் மீது சுமத்துவதும் இப்போதும் இங்கு நடக்கும் வேண்டாத வேலையாக இருந்து வருவதையும் கண்ணுற முடிகிறது

இன்று உடைகளில் அழுக்குப் படிந்து ஒதுக்குப் புறமாய் வாழும் நரிக்குறவர்கள் ஒரு காலத்தில் மராட்டிய மன்னன் வீர சிவாஜியின் படை வீரர்கள். உலகம் முழுக்க அதிகார வேட்டை தொடங்கிவிட்டிருந்த நேரம், முகலாயர்கள் இந்தியாவின் மீது படை எடுத்தார்கள். சிவாஜி படை தோல்வி காண ஏரளமானோர் சிறை பிடிக்கப்பட்டனர். அப்படித்தான் முகலாயர்களிடம் அடிமைகளாய் சிக்கினர் நரிக்குறவர்கள்.
மராட்டிய மண்ணுக்கே உரிய நிரம், குணத்தோடு இப்பெண்கள் மிகுந்த அழகுடையவர்களாய் இருந்தனர். மானத்தை உயிரெனப் போற்றும் இவர்களால் தொடர்ந்து எதிரிகளிடம் மல்லுக்கட்ட முடியவில்லை. தப்பித்தால் போதுமென்று வட இந்தியாவை விட்டு, தெற்கே தமிழகத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைகளில் மறைந்து வாழத் தொடங்கினர். காடு மற்றும் மலை சார்ந்த வாழ்க்கையில் வேட்டைத் தொழில், மூலிகை வைத்தியம் கற்றுத் தேர்ந்தனர்.
அடுத்து இந்தியாவில் ஆங்கிலேயப் படையெடுப்பு நிகழ்ந்தபோது, வனப் பகுதிகளில் இவர்களின் உதவி வெள்ளையர்களுக்கு பயன்பட்டிருக்கிறது. பலனாய் வெள்ளையர்களிடமிருந்து துப்பாக்கிகள் இவர்களுக்கு பரிசளிக்கப்பட்டிருக்கின்றன. அத்தகைய துப்பாகிகளைத்தான் இப்போதும் இவர்களிடம் நாம் பார்ப்பது.
ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு ஓரளவு தைரியம் பெற்ற இவர்கள், மெல்ல ஊர்ப்புரங்களை நோக்கி நகரத் தொடங்கியிருக்கின்றனர். என்றாலும் பல்லாண்டு கால அடிமை வாழ்க்கை இவர்களை மிகவும் முடக்கிப் போட்டுவிட்டிருந்தது. மொழி மற்றும் கலாச்சார வேறுபாடு காரணமாகவும் இதர குடிமக்களோடு பழகுவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டிருந்தது.பெண்கள் அழகுடையவர்களாகவும், ஆண்கள் நல்ல உடல் பலத்துடனும் காணப்பட்டாலும், சமுதாயத்தை எதிர்த்துப் போராடும் திறன் அற்றிருந்ததால் பெண்கள் பாலியல் ரீதியாகவும், ஆண்கள் பொருளாதார ரீதியாகவும் வஞ்சிக்கப்பட்டனர். இவ்வாறான தொடர் வன்கொடுமைகளால் சோர்வுற்ற நரிக்குறவர்கள், சமுதாயத்தில் யாருடனும் கலவாமல் தனித்தே வாழத்தொடங்கினர்.
அழகு ஒரு முக்கியக் குறியீடாக இருந்ததால், முதலில் அதையே அழித்தனர். அழுக்கு உடைகளுடன் வாரக் கணக்கில் குளிக்காமல், சிகை அலங்காரம் செய்யாமல், பற்களில் மீசி என்ற மை பூசி கருப்பாக்கிக் கொண்டனர். இச்செயல்களின் தொடர்ச்சியானது, இன்று அவர்களின் கலாச்சாரமாகவே மாறிவிட்டதைக் கான முடிகிறது.நரிக்குறவர்கள் எந்த சூழ்நிலையிலும் திருடுவதோ, பொய் சொல்வதோ கிடையாது. மானத்தை உயிரெனக் கருதுகின்றனர். ஆனால் திருட்டு வழக்குகளில் ஆள் கிடைக்காத சில மானங்கெட்ட போலிஸ்காரர்கள் இவர்களை சந்தேகக் கேசில் பிடித்து அடைப்பதுண்டு தங்களுடைய பண்பாடுகளை மிகக் கராராக பின்பற்றுகின்றனர். இவர்களது மொழி “வாக்ரிபோலி” என்றழைக்கப்படுகிறது. 24 மொழிகளின் கலவை இது. சிலர் மராட்டி பேசுகின்றனர். நீங்கள் எப்படிப்பட்ட சீமானாக இருந்தாலும், நரிக்குறவப் பெண்களை உங்களுக்கு மணமுடித்து தர மாட்டார்கள். கருகமணிதான் தாலி. கல்யாணத்தை இரவு நேரத்தில்தான் செய்கின்றனர். வரதட்சனை என்பது அறவே கிடையாது. ஆணுக்கும் பெண்னுக்கும் எல்லாவற்றிலும் சம உரிமை உண்டு.வயதுக்கு வந்தவுடன் பெண்களை திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். பிரசவம் ‘தீட்டு’ என்று கருதப்படுவதால், குடிசைக்கு வெளியில் வைத்துத்தான் குழந்தைப் பிறப்பு நடைபெறுகிறது. குழந்தை பிறந்த பின், 12 நாட்களுக்கு பிறகு தீட்டு கழித்து தாயும், சேயும் அழைத்துக் கொள்ளப்படுகின்றனர். மூன்று மாதங்களுக்கு பிறகே தந்தையோ, கணவனோ அவர்களைத் தொட அனுமதி.
மணமானவர்கள் யாருடனாவது கள்ள உறவு வைத்துக் கொண்டால், உடனே டைவர்ஸ்தான். “ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் வைக்கோலை மூன்று முறை கிள்ளிப் போட்டால் போதும், டைவர்ஸ் முடிந்தது.” மறுமணங்கள் தாராளமாக அனுமதிக்கப்படுவதால் இங்கே விதவைகள் கிடையாது. தாத்தா பாட்டிகள்கூட தனியாக இருக்க நேர்ந்தால், பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்கின்றனர். ஆண்கள் மாட்டு எலும்புகளால் அடிபடுவதோ, பாவாடையால் அடிபடுவதோ மிகப் பெரிய இழிவாக கருதப்படுகிறது. ஆண்களின் குடுமியைப் பிடித்து இழுப்பதும், பெண் தனது அந்தரங்க முடியைப் பிடுங்கி அவர்களின் மீது வீசுவதும் குற்றமாக, அவமானமாக கருதப்படுகிறது.
மரக்காணத்தில் இவர்களுக்கென்று உள்ள தண்ணிர் குழாயில், ‘ஒரு பெண்ணின் பாவாடை பட்டுவிட்டது’ பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. ஆத்திரப்பட்ட ஆண் ஒருவன், குடிநீர் குழாயை செருப்பால் அடித்துவிட்டு வெளியூர் கிளம்பிச் சென்றுவிட்டான். இன்று வரை ஆண்கள் குழாயில் தண்ணீர் குடிப்பதை தவிர்த்து, பதிலாக குளத்து நீரை அருந்துகின்றனர்.பிற சமுதாயத்தினர் இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டாவிட்டாலும், உபத்திரவம் செய்வது மட்டும் தொடர்கிறது. இவர்களது குடியிருப்புகளை தாண்டிச் செல்லும் ஆண்கள் பலர், “ஏ… பெருங்காயம் கெடைக்குமா?” என்று கேலி பேசிச் செல்கின்றனர், பெருங்காயம் என்பது அவர்களை உடலுறவுக்கு அழைப்பதற்கான குறியீடு,
பல சமயங்களில் இச்சமூகப் பெண்கள், நாகரீக சமுதாய ஆண்வர்க்கத்தால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகின்றனர். யாரும் கேட்பதற்கு நாதி இல்லாததால் இக்கொடுமை இன்றும் நீடிக்கிறது.பாண்டிச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள நரிக்குறவப் பெண்கள் பலர், அப்பகுதி பெரிய இடத்து பையன்களால் அம்மக்கள் கண்ணெதிரிலேயே பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டுள்ளனர். மீட்க முனைந்த அவர்களது உறவினர்களை ஒரு பெரிய கும்பலே வந்து அடித்து நாசப்படுத்தியுள்ளது.தொடர்ச்சியான அச்சத்துக்கு இடயிலேதான் எல்லா நரிக்குறவர்களின் வாழ்க்கையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.பொதுச்சமூகம் நாகரிகம் என்ற பெயரில் உடைகளில் தூய்மையும், உள்ளத்தில் அழுக்கும் கொண்டு திரிந்து கொண்டிருக்கிறது.
நரிக்குறவர்களின் அசல் பெயர் வக்ரிவாலா அல்லது குருவிக்காரன் அல்லது நக்கலே அல்லது அக்கிபிக்கி என்பதாகும். ஆனால் தமிழ்நாட்டு முதல்வர் மக்கள் திலகம் எம். ஜி. ராமச்சந்திரனின் அவர்கள் ஆட்சிக் காலத்தில் நரிக்குறவர் என்று தவறாகப் பெயரிடப்பட்டது.
குறவர்கள் என்பவர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குறிஞ்சித் திணை[மலை]யைச் சேர்ந்த தமிழர்கள் ஆனால் இந்த நரிக்குறவர் குஜராத்தை பூர்வீகமாக கொண்ட நாடோடிகள் என அறியப்படுகின்றனர் .
இவர்கள் துப்பாக்கியால் வேட்டையாடுகிறார்கள். ஆனால் தமிழ் குறவர்கள் வில் மற்றும் அம்புகளை வைத்து வேட்டையாடுவது, தேன் சேகரிப்பது, மூங்கில் கூடைகளை முடைவது போன்றவையே தமிழ் குறவர்களின் அசல் தொழிலாகும். தமிழ் குறவர்களுக்கும் மராத்தி அக்கிபிக்கிகளுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்.
இவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவு அற்றவர்கள். எனினும், சுகாதாரத்தில் கவனம் உடையவர்கள். காண்பதற்கு சுத்தமில்லாமல் இருந்தாலும், இவர்கள் வாழையடிவாழையாக உட்கொள்ளும் நாட்டுமருந்துகள், இவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் வராமலிருக்க, வருடத்திற்கு ஒரு முறை தங்களது பாரம்பரிய மருந்தினைத் தருவர். ஆண்கள் துப்பாக்கிச் சுடுவதிலும், கவண்வில்லிலும் (உண்டிவில்) திறமை மிக்கவர். பெண்கள் கலை வேலைப்பாடுகளில் கைத்தேர்ந்தோர் ஆவர்.
இந்த சமூக பெண்கள் கழுத்தில் வண்ணமயமான பாவாடை மற்றும் மணிகளை அணிந்திருந்தனர். ஆண்கள் நீண்ட முடியை வைத்திருப்பார்கள். இந்த மக்கள் காட்டில் வாழ்ந்தனர். அவர்கள் விலங்குகளையும், பறவைகளையும் சாப்பிடுவார்கள். வழிபாட்டு முறையில் சிவனை முழு முதற் கடவுளாகக் கொண்டாலும் (தாதாஜி) சடங்குகளில் காளி, ஈஸ்வரி, மாரியம்மன், துர்க்கை என்று பெண் கடவுளர்களுக்கே முக்கிய இடமிருக்கிறது. சடங்குகளின் அர்ப்பணிப்பு தேவியரையே சேருகிறது. அதேபோல தேவியரே குறிசொல்லும் பூசாரியில் தோன்றி சனங்களுக்குத் தீர்வு வழங்குகிறாள். நரிக்குறவர்களிடம் இருக்கும் இன்னொரு முக்கியமான வழிபாட்டு முறை – எருமைப் பலியிடல்.
வாழ்வுமுறை
ஹக்கி பிக்கி பாரம்பரிய வேட்டைக்காரர்கள்.இவர்கள் வாழ்வாதாரத்திற்காக பயணிக்கிறார்கள். இவர்கள் எல்லா மாநிலங்களிலும் உள்ள பெரிய கோயில்களுக்குச் சென்று தங்கள், ஊசி, பாசி, மணிகளைக் கொண்ட ஆபரணங்களை விற்று பருவம் முடிந்ததும் வீடு திரும்புவார்கள்.
பச்சை குத்துவதும் இவர்களின் தொழில்களில் ஒன்றாக இருக்கிறது.
ஹக்கி பிக்கி மக்கள் கூடாரங்களில் வசிப்பவர்கள். அரசின் முயற்சியால், இவர்களுக்கு இலவச வீடும், வீட்டுமனைப் பட்டாவும் வழங்கப்படுகின்றன. இன்னும் தேவைக்கேற்ப இதை நோக்கிச் செல்ல வேண்டி உள்ளது
முதியோர்கள் வகுக்கும் கட்டுப்பாட்டை இவர்களில் படித்தோர் உட்பட அனைவரும் ஏற்கின்றனர். திருமணத்தில் ஆண்களே, பெண்கள் குடும்பத்திற்கு பரிசப்பணம் தரவேண்டும்.
இவர்கள் குஜராத்தி, மராத்தி, உருது, தெலுங்கு, இந்தி, தமிழ் போன்ற பல்வேறு மொழிச் சொற்களை வாக்ரிகள் கலந்து பேசுகின்றனர். இவர்கள் பேசும் மொழி ‘வாக்ரிபோலி’ எனப்படுகிறது. இம்மொழி இந்தோ – ஆரிய மொழியாதலால் தமிழுக்கு புரியாத மொழியாகவும் இந்தி, உருது, குஜராத்தி மொழி பேசுவர்களுக்கு ஓரளவு புரியும்படியாக உள்ளதாக ‘வாக்ரிபோலி அகராதி’யைத் தொகுத்த ஜி. சீனிவாச வர்மா குறிப்பிடுகிறார். இவர் வாக்ரி போலி – தமிழ் – இந்தி – குஜராத்தி – ஆங்கிலம் ஆகிய மொழிகளடங்கிய ‘வாக்ரி போலி பன்மொழி அகராதி’ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
கிட்டு சிரோமனி என்பவரால் திருக்குறள் வாக்ரி பூலி மொழியில் முதன்முறையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
“நரிக்குறவர்களை, நல்ல நெறிக் குறவர்கள் என்று அழைத்து, அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் அலைந்து திரியாமல், ஓரிடத்தில் இருந்து வாழ வேண்டும் என்பதற்காக அவர்களுக்கென தி.மு.க. ஆட்சியில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் தேவராயநேரி என்னும் இடத்தில் கட்டப்பட்ட 140 குடியிருப்புகளை 13.03.1975 அன்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார்கள். இருப்பினும் நரிக்குறவர்கள் இன்றும் நாடோடிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்”. – தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை 27.05.2008-ல் வெளியிட்ட அரசாணை (நிலை) எண்: 60 இப்படிச் சொல்கிறது.
தமிழகச் சூழலில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, அவர்களும் வாக்ரிகளை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை வைத்திருந்தார்
ஆ. குழந்தை அவர்களின் வாக்ரிகளின் வாழ்வியல்’ (2011) என்ற நூலில் கண்டுள்ளபடி தமிழகத்திலுள்ள வாக்ரி குடும்பங்களின் எண்ணிக்கை 7649; மொத்த மக்கள் தொகை 28356 (கணக்கெடுப்பு : Tribal Society மற்றும் தமிழ்நாடு பழங்குடி வாக்ரிவேல் தொழிலாளர் சங்கம் – 2008)
1975-ல் வாக்ரிகளின் மக்கள் தொகை 5000 இருந்திருக்கும் எனக் கொண்டாலும் இவர்கள் திறந்து வைத்த 140 குடியிருப்புகள் மூலம் வாக்ரிகளின் நாடோடி வாழ்க்கை முடிவுக்கு வருமென எப்படி இவர்களால் கனவு காண முடிந்தது. அப்துல்கலாம் தோற்றார் போங்கள் என்ற விமர்சனங்களும் பேசப்பட்டன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் தோழர் து. ரவிக்குமார் அவர்கள் சட்டமன்றத்தில் வாக்ரிகள் பற்றி பேசினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வாக்ரிகளின் மாநாட்டில் பங்கு பெற்றார். தமிழக அரசும் இவர்கள் மீது கரிசனம் காட்டிக் கொண்டு வெளியிட்ட மேற்கண்ட அரசாணை மூலம் தமிழ்நாடு ‘நரிக்குறவர் நல வாரியம்’ அமைக்க உத்தரவிட்டது
இவர்களது கோரிக்கைகளுக்கு பலரும் அழுத்தம் கொடுக்காமை, வாக்ரிகள் பெரும் அமைப்பாக திரளாத நிலைமை, தங்களை ஓட்டு வங்கியாக மாற்றி அரசியல் கட்சிகளுடன் பேரம் பேச முடியாத நிலை, சமூக ஒதுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் இவர்கள் நலன் சார்ந்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் விளிம்பு நிலை வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்,
சமூகத்தில் ‘வாக்ரிகள்’ எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் உதாரணமாக சிலவற்றை கண்ணுற்றால் வலிகளைத் தாண்டி செல்ல முடியாது
1. பிறர் வாக்ரிகள் மீது கொண்டுள்ள இழிவான எண்ணங்கள். இவர்களை சம மனிதர்களாக மதிக்காத போக்கு நின்றபாடில்லை.
2. பேருந்து மற்றும் தொடர்வண்டிப் பயணங்களில் கேலி, கிண்டலுக்குள்ளாதல்; அவமரியாதை செய்யப்படுதல்.
3. குழந்தைகள் பிற குழந்தைகளால் கேலி, கிண்டல் செய்யப்படுதல். பள்ளிகளின் மற்ற குழந்தையுடன் இணைந்து படிக்க முடியாத நிலை.
4. தங்களுடைய மொழியைப் படிக்க முடியாத நிலை ; தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை கட்டாயமாக படிக்க வேண்டிய அவலம்; தாய்மொழி வழிக்கல்வி மறுக்கப்படல்.
5. மிகுந்த சிரமங்களுக்கிடையே படித்தாலும் பழங்குடியினருக்குண்டான சலுகைகள் மறுக்கப்பட்டு மிகப் பிற்படுத்தப்பட்டோர் (MBC) வகுப்பில் இருப்பதனால் வன்னியர், மறவர், அம்பலக்காரர், இசை வேளாளர், மருத்துவர் போன்ற மிகப்பிற்படுத்தப்பட்ட(MBC) சாதியினரோடு போட்டி போட முடியாத நிலைமை.
6. சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்கள் வாக்ரிகளை மிக இழிவாக சித்தரிக்கும் போக்கு.
7. பொதுமக்களோடு திரையரங்கு, பொருட்காட்சி போன்றவற்றில் பங்கேற்க இயலாமை.
8. தமிழக, புதுவை அரசுகளின் பாரா முகம்.
9. சுயதொழில் தொடங்க அரசு, வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் உதவி செய்யாத நிலையில் கந்து வட்டிக் கொடுமைகளுக்கு ஆளாதல். வங்கிகள் பிணை கேட்கும்போது இவர்களிடம் எதுவும் இருப்பதில்லை.
10. பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுதல். அவர்கள் உயிர்வாழ அடிப்படை மனித உரிமைகள் கூட தரப்படாமை.
11. தேவதாசிகளின் பரதக் கலையை உயர்த்தப்பட்ட சாதியினர் கைப்பற்றிக் கொண்டதைப் போல வாக்ரிகளின் பச்சைக் குத்துதல், பாசி மணி விற்றல் போன்றவை மிக நவீனமான கடைகள் மூலம் பலர் இந்த தொழிலுக்கு வந்துவிட்டதால் இவர்களது பிழைப்பில் மண் விழுந்துள்ளது.
12. இவர்களது மூலிகை வைத்தியம் முறையான கவனிப்பைப் பெறாது உள்ளது.
13. முன்னாள் மத்திய புலனாய்வு (CBI) அதிகாரி ரகோத்தமன், சென்னை வேளச்சேரி போலி மோதல் படுகொலை தொடர்பாக ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி விவாதத்தில் பங்கு பெற்ற போது போலீசாரிடம் துப்பாக்கிகள் இருந்தால் சுடத்தான் செய்வார்கள். எனவே, துப்பாக்கிகளைத் திரும்ப பெறுங்கள் என்று விதண்டாவாதம் செய்தார். கூடவே எவ்வித சம்மந்தமும் இல்லாம் குருவிக்காரனிடம் துப்பாக்கி இருக்கிறது. அவன் உங்களையும் என்னையும் சுடுவான் என்றார். இந்த மாதிரியான கேவலப்போக்கு படித்தவர்கள் என்று சொல்லக்கூடியவர்களின் பொதுப் புத்தியில் இருப்பது மிகவும் மோசமானது. எங்காவது இம்மாதிரியான நிகழ்வுகள் நடந்திருப்பதை ரகோத்தமனால் எடுத்துக்காட்ட முடியுமா? அத்துடன் இதில் பங்கேற்றவர்கள் இது குறித்து எவ்வித எதிர்வினையும் நிகழ்த்தவில்லை.
14.குற்றவாளிப் பழங்குடிகள் சட்டங்கள் (Criminal Tribes Act of 1871, Act 3 of 1911 and Act 6 of 1924)மற்றும் பஞ்சாப் ராணுவ போக்குவரத்துச் சட்டம் (Punjab Transport Act 1903) போன்றவற்றின் மூலம் பழங்குடி நாடோடி வாழ்க்கை முடக்கப்பட்டது. வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் இவர்கள் வேட்டையாடுவதைத் தடை செய்தது. அதன்படி இவர்களுக்குத் துப்பாக்கி உரிமம் வழங்குவது கூட குறைக்கப்பட்டது. மேலும்இவர்கள் வேட்டையாடுவது உணவிற்காகத் தானே தவிர பெரும் பொருளீட்டவும் கடத்தவும் அல்ல என்பது இங்கு நினைவு கூரத்தக்கது. சிங்கம், புலி, யானை, மயில் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட விலங்குகளை இவர்கள் பணத்திற்காக வேட்டையாடுவதில்லை. இதுவும் ஆளும் வர்க்கத்திற்கு தெரியும். இருப்பினும் இவர்களுக்கெதிரான ஆளும் வர்க்க கருத்தியல் பெரும்பான்மையோரின் பொதுப்புத்தியில் செருகப்பட்டுள்ளது.
15.வாக்ரி இனக்குழுக்களிடையே எருமை, ஆடுகளை வெட்டிப் பலி கொடுக்கும் வழிபாட்டு முறை வழக்கிலுள்ளது. இவ்விலங்குகளைப் பலியிட்டு ரத்தம் குடிக்கும் நிகழ்வுகள் சாதி இந்துக்களின் பலியிடல் சடங்குகளைப் போன்றவையே. இருப்பினும் இவற்றை மிகக் கொடூரமானதாகவும் அருவெறுப்பானதாகவும் தமிழ் ஊடகங்கள் சித்தரிக்கின்றன. கலைஞர் தொலைக்காட்சிச் செய்திகளில் சிறப்புப் பார்வையாக இந்நிகழ்வு ஒளிபரப்பப்பட்டன.
16.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சமத்துவபுரத்தில் வாக்ரிகள் காளிக்கு எருமை மாட்டை பலிகொடுத்து ரத்தம் குடித்ததை காட்டுமிராண்டித் தனம் என்று விடுதலை நாளிதழ் பதிவு செய்தது. குதிரைகளைப் பலியிட்டு நடத்தப்பட்ட அசுவமேத யாகத்தைப் போன்று நாடோடிப் பழங்குடி கலாச்சார பலியிடல் நிகழ்வுகளை பகுத்தறிவு கொள்கை கொண்டு பார்ப்பது சாத்தியமில்லாத ஒன்று.
17.நமது சமூகத்தில் வாக்ரிகள் பேருந்து மற்றும் தொடர்வண்டிப் பயணங்கள் செய்ய முடியாத சூழல் உள்ளது. இது மட்டுமல்ல திரையங்குளில் திரைப்படம் பார்க்க விடாமல் திருப்பியனுப்பப்பட்ட நிகழ்வுகள் கூட அடிக்கடி நடந்தேறுகின்றன.
18.தொழில் நுணுக்கம் நிரம்பப் பெற்ற வாக்ரிகள் சுயதொழில் முனைவோராக அரசும் வங்கிகளும் கேட்கும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து கடன் பெறுவது இயலாத காரியமாக உள்ளது. வேட்டையாடுதல், நாட்டு வெடி மருந்து தயாரித்தல் இன்றைய நிலையில் சாத்தியமில்லை. தேனெடுத்தல் போன்றவைகள் மூலம் ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்க வாய்ப்பில்லை.
19.இடுமுடி, கோணி ஊசி, சீப்பு, ஸ்டிக்கர் பொட்டு, வளையல், குங்குமம் போன்ற பேன்ஸி பொருட்கள் விற்பனை இன்று முற்றிலும் பெரும் முதலீட்டுக் கடைகள் மூலம் வியாபாரம் செய்யப்படுகின்றன. இவற்றைப் பேருந்து நிலையங்கள், திருவிழாக்கள் ஆகியவற்றில் விற்பனை செய்து பொருளீட்டுவது வாக்ரிகளுக்கு மிகச் சிரமமானதாகவே உள்ளது. வேறு வகையான பணிகளைச் செய்ய இவர்களால் முடிவதில்லை.
20.வாக்ரிகளின் வில் – அம்புகளைக் கொண்டு வேட்டையாடுந்திறன், துப்பாக்கிகளைக் கையாளும் லாவகம் போன்றவற்றில் கவரப்பட்ட ஆங்கிலேயர்கள் இவர்களைப் பயன்படுத்தி எதிரிப்படையைத் தாக்கியுள்ளனர். கரடு முரடான இடங்களில் கூட வேட்டைக்காக விலங்குகளோடு ஈடு கொடுத்து ஓடக் கூடிய திறமை, வனம் சார்ந்த இவர்களது அறிவுக் கூர்மை போன்றவற்றை நமது அரசுகள் பயன்படுத்திக் கொள்ள மறுக்கின்றன. இவர்களுக்கு அடிப்படைக் கல்வி வழங்கப்பட்டு வனத்துறை – ராணுவத்தில் பணி, விளையாட்டுத் துறையில் குறிப்பாக துப்பாக்கிச் சுடுதல், வில் வித்தைப் போட்டிகள் போன்றவற்றில் ஈடுபடுத்தி இவர்களது திறமைகளை பயன்படுத்திக் கொள்ளாமலிருப்பது வேதனையளிக்கக் கூடியது.
21.எலிக்கிட்டி வைத்து எலிகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வாக்ரிகளுக்கு வேளாண்துறை உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை. இவர்களது இந்தப் பணிகளுக்கு அரசு வேளாண்துறையின் மூலம் கடன், மானியம் போன்ற உதவிகள் வழங்க வேண்டும்.
22. சீப்பு, பாசி மணி, ஊசி, முள் வாங்கி போன்ற பல்வேறு கைவினைப் பொருட்களை வாக்ரிகள் உற்பத்தி செய்கின்றனர். இவற்றைச் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை. அரசு கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் இவர்களது தயாரிப்புகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து காட்சிப்படுத்த வேண்டும். அரசின் பூம்புகார் கைவினைப் பொருட்கள் விற்பனையகத்தில் இவர்களது தயாரிப்புகள் வாங்கப்பட்டு சந்தைப்படுத்த வேண்டும்.
23.வாக்ரிகளின் மூலிகை மருத்துவம் மிகப் பிரசித்தம். நாடி பார்த்து நோய்களைக் கண்டறியும் இவர்கள், பல்வேறு மூலிகைப் பொடிகளைக் கொண்டு நாள்பட்ட பல நோய்களுக்க மருத்துவம் செய்கின்றனர். தமிழ் மருத்துவம் என்று பெருமை பேசுபவர்கள் வாக்ரிகளின் மூலிகை மருத்துவ அறிவைப் பயன்படுத்திக் கொள்ளாதது வியப்பளிக்கக் கூடியது அல்ல. தமிழக அரசுகள் இரு அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளுக்கு மூடு விழா நடத்தத் துடிக்கும் போது இந்த மருத்துவ முறையை மேம்படுத்த வாக்ரிகளின் மூலிகை அறிவைப் பயன்படுத்தக் கோருவதுகூட நகைப்பிற்குரியதுதான்.
24.வாக்ரி குழந்தைகளின் கல்வி நிலை மிக மோசமாக உள்ளது. வாக்ரி போலி மொழிக்கு வரி வடிவம் இல்லாததாலும் இங்குள்ள தமிழ் வழிப் பள்ளிகளில் இரு மொழிகளைப் படிக்க வேண்டிய கட்டாயம் மற்றும் வாக்ரி குழந்தைகளோடு இணையாத கல்வி முறையும் பிற குழந்தைகளின் கேலி கிண்டல் சீண்டல்கள் இக்குழந்தைகளை அரசுப் பள்ளிகளை விட்டு அந்நியப்படுத்துகின்றன.
25.விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கூட்டு ரோட்டில் உள்ள வாக்ரியார் காலனியில் நடத்தும் உண்டு உறைவிடப் பள்ளியை பார்வையிட்ட போது 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் அக்காலனியில் இருப்பது தெரிய வந்தது. எப்போதோ கட்டப்பட்ட அக்காலனி வீடு மிகவும் சிதலமுற்றுள்ள நிலையில் அவற்றின் முன்புறம் ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரை போடப்பட்ட பகுதிதான் வாக்ரிகளின் உண்டு உறைவிடப் பள்ளியாகச் செயல்படுகிறது. இங்கிருந்து சில மீட்டர் தொலைவில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் வட்டார வள மையம் கட்டிடம் மிளிர்கிறது. எனக்குத் தெரிந்த வகையில் வெறும் மூன்று மாணவர்களுக்காக இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் தமிழகத்தில் நிறைய இருக்கின்றன. இவற்றில் தலைமையாசிரியர், மற்றுமொரு ஆசிரியர் என இரு பணியிடம் உண்டு. இவர்களுக்குப் பயிற்சியளிக்க ஒன்றியந்தோறுமுள்ள ஒவ்வொரு வட்டார வள மையத்திலும் சுமார் 20 ஆசிரியப் பயிற்றுநர்களும் ஒரு மேற்பார்வையாளரும் பணி செய்கின்றனர். இவர்கள் மூலம் கணக்கெடுத்து அரசு சொல்லும் தகவல் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டிய பள்ளி வயதுக் குழந்தைகள் இல்லை.
26.திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம், அதன் அருகிலுள்ள வாக்ரியார் காலனியில் சுமார் 100 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு சில குழந்தைகள் மட்டும் பொதுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். இங்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் உண்டு உறைவிடப் பள்ளியும் இல்லை. இங்குள்ள வாக்ரிகளுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, நலவாரிய அட்டை எல்லாம் உண்டு. ஆனால் இக்குழந்தைகளுக்கு கல்வி சுத்தமாக இல்லை. இக்குழந்தைகள் தங்கள் தாய் தந்தையருடன் பேருந்து நிலையத்திலேயே சுற்றி வருகின்றனர். அனைவருக்கும் தொடக்கக் கல்வி தீவிரமாக அமலில் இருக்கும் தமிழகத்தில் இப்பகுதியிலும் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டிய பள்ளி வயதுக் குழந்தைகள் இல்லை என்பதே நமது அதிகார வர்க்கப் புள்ளி விவரம்.
27.வாக்ரிகள் எப்போதும் கூட்டமாக வாழும் இயல்புடையவர்கள். அவர்கள் வாழும் பகுதியில் கண்டிப்பாக 50 குழந்தைகள் இருக்கும். இவர்கள் பொதுப் பள்ளிக்குப் படிக்க வரமாட்டார்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பதை விடுத்து இப்பகுதிகளில் வாக்ரிகளுக்கு தனிப் பள்ளியை அரசு ஏன் நடத்தக் கூடாது? இதற்கு மட்டும் தொண்டு நிறுவனங்களை கைகாட்டி விடும் அரசு ஒரு சில குழந்தைகளுக்காக பள்ளிகளை நடத்திக் கொண்டுதானே இருக்கிறது? அரசு – தனியார் கூட்டு என்று சொல்லி அரசு தன் கடமையிலிருந்து விலகிக் கொள்கிறது.
28.விழுப்புரம் கோலியனூர் கூட்டு ரோட்டில் உள்ள Tribal Society-ம் தமிழ்நாடு பழங்குடி வாக்ரிவேல் தொழிலாளர் சங்கமும் தமிழகம் மற்றும் புதுவையில் வாக்ரிகள் மக்கள் தொகையை 2008-ல் கணக்கெடுத்தன. அதன்படி தமிழகத்தின் 28 மாவட்டங்கள், 91 வட்டங்கள், 170 கிராமங்களில் பரவியுள்ள வாக்ரி குடும்பங்களின் எண்ணிக்கை 7649 ஆண்கள் 14737 பெண்கள் 13619 மொத்தம் 28356.
புதுச்சேரியிலுள்ள வாக்ரிகளின் எண்ணிக்கை 588 ( ஆண்கள் 289, பெண்கள் 299)
தமிழகம்:-
—————-
பள்ளி செல்லும் குழந்தைகள் ( 1 – 15 ) 1411 + 1124 = 2535
இடைநிற்றல் 611 + 458 = 1069
பள்ளிக்குச் செல்லாதவர்கள் 2376 + 2248 = 4624
புதுச்சேரி:-
——————
பள்ளி செல்பவர்கள் ( 1 – 15 ) 30 + 17 = 47
இடைநிற்றல் 2 + 2 = 4
பள்ளிச் செல்லாதோர் 72 + 60 = 132
இதைத் துல்லியமான கணக்கீடு என்று சொல்ல முடியாவிட்டாலும் இன்று சுமார் 40000 வாக்ரி மக்கள் தமிழகத்தில் இருப்பதை ஒருவாறு அவதானிக்கலாம். இவர்களில் சுமார் 10000 ( 1 – 18 வயது) குழந்தைகள் கல்வி வாய்ப்பின்றி தமிழகத்தில் வளர்வது எவ்வளவு பெரிய கொடுமை?
இப்போதுள்ள சூழலில் மாணவர்களின் எண்ணிக்கைக் குறைவைக் காரணம் காட்டி ஒரு பள்ளியை அவ்வளவு எளிதில் இழுத்து மூட முடியாது. அப்போது அரசு பல்வேறு போராட்டங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் அமைப்பாகத் திரளாத வாக்ரிகள் இருப்பிடத்தில் தனிப் பள்ளிகள் தொடங்கவும் அவர்களில் கல்வி பற்றி பேசவும் நம் சமூகம் மறுக்கிறது.
வாக்ரிகள் ஓரிடத்தில் நிலையாக இருப்பதில்லை. அதனால் நிரந்தரக் குடியிருப்புகளை அமைத்துக் கொள்வதில்லை. இவர்கள் எந்த ஊரில் தங்கியிருக்கிறார்களோ அங்கு பிறந்த குழந்தைக்கு அவ்வூரின் பெயரை வைக்கும் பழக்கம் உண்டு. தற்போது சினிமா நட்சத்திரங்களின் பெயர்களை விரும்பி வைக்கிறார்கள். குடி, ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என பணம், பொருள் எவற்றையும் சேமிக்காத வாழ்க்கை முறை இவர்களுடையது. இந்த நாடோடித்தன்மையுடன் கூடவே பழங்குடி இனக் குழு பண்புகளை நிரம்பப் பெற்றவர்கள் வாக்ரிகள்.
தமிழகம் மற்றும் புதுவைச் சூழலில் மது விற்பது அரசின் அறம் ஆகி விட்டதால் மது குடிப்பது குடிமக்களின் அறமானதில் – பல வாக்ரிகள் 25 /30 வயதிலேயே பலியாவதும், இளம்பெண்கள் விதவை ஆவதும், சிறு குழந்தைகள் அனாதை ஆவதும் தொடர்கிறது.
குஜராத், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் வாக்ரிகள் அட்டவணைப் பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழகத்தில் வாக்ரிகள் மிகப் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பட்டியலில் இருந்தனர்.
இது எவ்வளவு பெரிய கொடுமை? இது உள் ஒதுக்கீட்டுக் காலம். பிற்பட்டோரில் இஸ்லாமியருக்கும் தாழ்த்தப்பட்டோரில் அருந்ததியினருக்கும் உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை அனைத்து தரப்பிற்கும் விரிவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். புதுச்சேரியில் மிகக் குறைவானஎண்ணிக்கையில் உள்ள வாக்ரிகளுக்கு எவ்வித ஒதுக்கீடும் இல்லை.
மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (MBC) ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒன்றிரண்டு சாதிப் பிரிவுகளைத் தவிர மருத்துவர் உள்ளிட்ட உண்மையில் மிகவும் பின்தங்கிய பிரிவினர் போட்டி போடுவதற்கு வாய்ப்பில்லை. இந்நிலையில் இதுவரை கல்வி வேலை வாய்ப்புகளில் எவ்விதப் பங்கும் பெறாத வாக்ரிகளை இவர்களுடன் போட்டி போட வைப்பது எவ்வகையில் நியாயம் என்று தெரியவில்லை. வாக்ரிகளைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தமிழக அரசிற்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலை ஏற்பட்டது.
வாக்ரிகளைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய – மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கம்யூனிஸ்டுகள் மற்றும் என் ஜி ஓக்கள் முன்னெடுப்பில் பொது தளத்தில் விவாத பொருள் ஆனது.
மத்திய – மாநில அரசுகள் இம் மக்களுக்கு செய்ய வேண்டியன என்ற வகையில் கண்ணுற்றால்
1. பழங்குடி கலாச்சாரக் கூறுகளைக் கொண்ட வாக்ரிகள் பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்த்தல். இதன் மூலம் கல்வி – வேலை வாய்ப்பில் வாக்ரிகளுக்க உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வாய்ப்புண்டாகும்.
2. ஒவ்வொரு வாக்ரி வாழும் பகுதியிலும் அரசே தனிப் பள்ளிகளை நடத்த வேண்டும். அதில் வாக்ரிகளின் தாய்மொழிக் கல்வியோடு அவர்களது வாழ்க்கையோடு இணைந்த கல்வி முறை இருக்க வேண்டும்.
3. பிற சமூக மக்கள் வாக்ரிகளை கேலி – கிண்டல் செய்வது தடுக்கப்பட்டு, பிற சமூகத்துடன் நல்லிணக்கம் ஏற்பட ஊடகங்கள், சினிமா, தொலைக்காட்சி போன்றவை உதவ வேண்டும். இவர்களைக் கேலி செய்யும் ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4.வாக்ரிகளின் துப்பாக்கிச் சுடும் திறமைக்கேற்றவாறு ராணுவத்தில் பணியமர்த்த வேண்டும். வில்வித்தை, துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் விளையாட்டுத் துறை முன்னுரிமை வழங்கி தேசிய அளவிலும், காமன்வெல்த், ஏசியாட், ஒலிம்பிக் போன்றவற்றில் கலந்து கொள்ள வழி வகுக்க வேண்டும்.
5.வேட்டையாடுதல் மற்றும் வனம் சார்ந்த நுணுக்கங்கள் கைவரப்பெற்ற வாக்ரிகளை வனத்துறைப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.
6.இவர்களின் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் திறனை ஊக்குவித்து உரிய முறையில் பலனடைய வழி வகுக்க வேண்டும்.
7.இவர்களது மூலிகை அறிவை தமிழ்ச் சித்த மருத்துவத் துறையை மேம்படுத்தப் பயன்படுத்த வேண்டும்.
8. அரசு நேரடியாகவும், கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகவும் சுய தொழில் தொடங்க எவ்வித முன் நிபந்தனையுமின்றி கடனுதவி வழங்க வேண்டும். இவற்றில் பெரும்பங்கு மானியமாக வழங்க வேண்டும்.
9. கல்வி உதவித் தொகைகள், மேற்படிப்பிற்கான முழுச் செலவையும் அரசே ஏற்றல் வேண்டும். இல்லாவிட்டால் 100% மானியத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்க வேண்டும்.
10. இவர்களது கைவினைப் பொருட்கள் விற்பனையகங்களை பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் இலவசக் கடைகள் அமைத்துத் தர வேண்டும்.
11.வாக்ரிகள் தொழில் மற்றும் பணி நிமித்தம் குடியிருக்கும் இடங்களில் வீடுகள் கட்டித் தருவதோடு அப்பகுதிக்குத் தேவையான சாலை வசதி, குடிநீர் இணைப்பு, மின் விளக்கு வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
12.வாக்ரிகளுக்கு சமத்துவபுரக் குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். வாக்ரிகள் என்பதற்கான இந்த வாய்ப்பு மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.
13.இவர்கள் வாழும் பகுதியில் பிரத்யேக மருத்துவமனைகள் ஏற்படுத்த வேண்டும். அவை முழு நேரமும் இயங்க வழி செய்யப்படுதல் வேண்டும்.
14.குடியிருப்பு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் இவர்களைச் சென்றடைய தனிக் கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். மாவட்ட அளவில் ஏற்படுத்தப்படும் இவ்வமைப்புகளுக்கு வாக்ரிகளுக்க உறுப்பான்மை வழங்க வேண்டும்.
15. கிப்ட் சிரோமணி, சீனிவாச வர்மா ஆகியோரின் முயற்சிகள் முழு வெற்றியடைய வாக்ரிபோலிக்கு வரி வடிவம் அமைக்க அவர்களுக்குரிய பாடத்திட்டங்கள் வகுக்க, அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உரிய தொகை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் ஒரு சிறுபகுதி மட்டுமே. விளிம்பு நிலையிலுள்ள வாக்ரி சமூகத்தின் தேவைகளை, அச்சமூகத்தின் பிரதிநிதிகள், மானுடவியல் ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் போன்றோரடங்கிய குழு அமைத்து ஆய்வு செய்து கண்டுணர வேண்டும். அதற்கேற்றவாறு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான்
செப்டம்பர் 15 / 2022 அன்று பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்தார்.
தமிழகத்தில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இதுதொடர்பாக அரசுக்கும், முதல்வருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தச் சூழலில், கடந்த மார்ச் 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில், நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, அதற்கான பல்வேறு காரணங்களையும் தெரிவித்திருந்தார்.
பிரதமருக்கு அவர் எழுதியிருந்த கடிதத்தில், நரிக்குறவர்கள் சமூகம், மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களில் ஒன்று. பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் அவர்கள் அனைத்து அரசமைப்பு ரீதியிலான பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை பெற தகுதியுடையவர்களாவர். இந்த சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது மத்திய அரசு, இந்திய நாடாளுமன்றத்தில் 2022/டிசம்பர் 14 அன்று, நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்கும் மசோதாவின்
மீது திருத்தங்களை முன்மொழிந்து நாடாளு மன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வரவேற்றுள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி.,பேசியதாவது: நரிக்குறவன் மற்றும் குருவிக்காரன் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலு க்கு கொண்டு வருகிற இந்த திருத்த த்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் வரவேற்கிறேன், அதே நேரத்தில் இந்த மசோதாவின் மீது இரண்டு திருத்தங்களை இங்கே நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம். நரிக்குறவன், குருவிக்காரன் என்று ‘ன்’ விகுதியிலே இருப்பது மரியாதை குறைவானது மட்டுமல்ல அந்த சொல் என்பது ஆணை மட்டுமே குறிக்கும். பெண்ணை குறிக்காது. எனவே பன்மை விகுதியில் நரிக்குறவர், குருவிக் காரர் என்று திருத்தம் செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என முன்வைத்துள்ளார்.
தமிழ்நாடு, கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் விடுபட்டிருந்த சமுதாயத்தினரை சேர்க்க அனுமதி வழங்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து பழங்குடியினருக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் இனி நரிக்குறவர், குருவிக்காரர், ஹட்டி, பிரிஜியா சமூகத்தினருக்கும் கிடைக்கும். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் ஹட்டி சமூகத்தைச் சேர்ந்த 1.60 லட்சம் மக்கள் பயனடைவர். ஹட்டி இனமக்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தில் அதிக அளவில் உள்ளனர். அதேபோல, சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிக அளவில் உள்ள பிரிஜியா இனத்தவரும் பயனடைவர். தமிழகத்தில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தவர்களும் இதன்மூலம் பயன்பெறுவர்.
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தை சேர்ப்பதற்கான மசோதா சட்டமாக இயற்றப்படும். அதன்பிறகு, தமிழகத்தின் திருத்தப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட சமூகங்களின் உறுப்பினர்கள், மத்திய அரசின் தற்போதைய நலத் திட்டங்களின் பயன்களை பெற முடியும்.
மெட்ரிக் படிப்புக்கு பிந்தைய கல்வி உதவித்தொகை, வெளிநாடுகளில் படிப்பதற்கான தேசிய கல்வி உதவித்தொகை, தேசிய ஆய்வு உதவித்தொகை, உயர்தரக் கல்வி, தேசிய ஷெட்யூல்டு பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்திடம் இருந்து சலுகை கடன்கள், ஷெட்யூல்டு பழங்குடியின மாணவர்கள் மற்றும் மாணவியருக்கான விடுதிகள் போன்ற திட்டங்கள் மூலம் இந்த இனத்தவர் பயன்பெற முடியும். மேலும், மத்திய அரசு கொள்கையின்படி, அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பயன்களையும் இவர்கள் பெறமுடியும்
தமிழக சுழலில் மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வரவேற்று தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி என பெருமிதப்பட்டுள்ளார் அறிக்கை வெளியிட்டுள்ளார்
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியைச் சேர்ந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பிரியா, திவ்யா, தர்ஷினி ஆகியோர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து 3 மாணவிகளும் பேசினர்.
அப்போது, மாணவிகளின் கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதலமைச்சர் உறுதியளித்தார்.
இதனையடுத்து ஆவடி நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு அமைச்சர் நாசர், ஆவடி மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார் ஆகியோர் நேரில் சென்றனர். மேலும், முதல்வரை சந்தித்த 3 மாணவிகள் உட்பட 40 பேரை சந்தித்து அவர்களின் கல்வி குறித்து கேட்டறிந்தனர்.
தொடர்ந்து நரிக்குறவ மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார். இன்னும் ஒரு வாரத்தில் தங்களை காண நேரில் வருவதாக வாக்குறுதி அளித்தார்.
அப்போது பேசிய முதல்வர் மு.க ஸ்டாலி,ன உங்கள் வீட்டிற்கு வந்தால் சோறு கொடுப்பீர்களா என கேட்டார். அதற்கு, தங்களுக்கு கறி சோறு போடுவதாக மாணவிகள் சந்தோஷமாக பதிலளித்தனர். அதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பாக ஒருநாள் வருவேன் என்று கூறினார்.
முதல்வர் சொன்னது போலவே 2022/ ஏப்ரல் 15 வெள்ளிக்கிழமை அன்று ஆவடியில் உள்ள மாணவியின் வீட்டிற்கு முதல்வர் சென்றார். அவரை நேரில் பார்த்த உடன் அனைவரும் உற்சாகமடைந்தனர். மாணவிகள் பூ கொடுத்தும் பாசிமணி அணிவித்தும் வரவேற்றனர்.
இதனையடுத்து முதல்வருக்கு புது எவர்சில்வர் டம்பளரில் காபி கொடுக்கப்பட்டது. பின்னர் தட்டில் வைத்து இட்லி, வடை, நாட்டுக்கோழி குழம்பு, சட்னி அளிக்கப்பட்டது. அதனை அன்போடு சாப்பிட்ட முதல்வர் உணவு கொடுத்த அனைவருக்கும் நன்றி கூறினார். முதல்வர் இட்லி சாப்பிடும் முன்பாக அருகில் இருந்த குழந்தைக்கு இட்லியை ஊட்டி விட்டு மகிழ்ந்தார்.
உணவு காரமாக இருந்ததாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதற்கு அங்கிருந்தவர்களே காரமாக சாப்பிட்டால்தான் சளி இருமல் வராது என்றும் தெரிவித்தனர். முதல்வர் நேரில் வந்தது இன்னமும் கூட நம்ப முடியாமல் இருப்பதாக மாணவிகளும் பெற்றோர்களும் தெரிவித்தனர். கனவில் நடப்பது போல இருப்பதாகவும் கூறினர். சொன்னபடி மாணவிகளின் வீட்டிற்குப் போய் சாப்பிட்டு விட்டு வந்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள்
தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், இதுபோன்ற விழாவில் பங்கேற்பதுதான் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். சென்னை மேயர், அமைச்சர், துணை முதல்வராக இருந்தபோது முதல்வராக இருந்த போதும் எத்தனையோ விழாவில் பங்கெடுத்துள்ளேன். உங்களைப் போன்ற அன்பானவர்கள் கொடுக்கும் வரவேற்பும், இதுபோன்ற விழாக்களும்தான்வழங்கும் மீடியாகும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.விளிம்பு நிலை மக்களுக்கு என்றைக்கும் திமுக அரசு துணை நிற்கும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார்.
மாண்புமிகு தமிழக முதல்வரின் இச்செயல் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்கள் வரையிலான மக்கள் பிரதிநிதி வரையில் தொடர வேண்டிய அத்தியாவசியமான பணியாக இருப்பதை செயல்களின் மூலம் உணர்த்துவது தான் காலத்தின் முன் வழங்கும் நீதியாகும்
நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள்
வேதனை பட மாட்டார் – எனப் பாடலாய் கர்ஜித்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்,1968 ல் ஒளிவிளக்கு திரைப்படத்தில் – தங்கத் தாரகை அம்மா ஜெயலலிதா அவர்களுடன்,
திரு, வாலி அவர்கள் பாடல் எழுதி, திருவாளர்கள் சௌகார்ஜானகி, டிஎம்எஸ் சௌந்தரராஜன் பாடி
எம் எஸ்,விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த பாடலுக்கு ரத்தமும் சதையுமாய் மானுட சாட்சியாக மாறிய
மக்கள் திலகம் MGR அவர்களும்
தங்கத் தாரகை அம்மா அவர்களும்
நாங்க புதுசா
நாங்க புதுசா கட்டிக்கிட்ட
ஜோடிதானுங்க நல்ல
பாட்டு படிக்கும் வானம்
பாடிதானுங்க
நாங்க புதுசா
நாங்க புதுசா கட்டிக்கிட்ட
ஜோடிதானுங்க நல்ல
பாட்டு படிக்கும் வானம்
பாடிதானுங்க
ஆ
புதுசா கட்டிக்கிட்ட
ஜோடிதானுங்க நல்ல
பாட்டு படிக்கும் வானம்
பாடிதானுங்க
ஏ சிங்கி
ஏ சிங்கா
ஏ சிங்கி
ஏ சிங்கா
கண்ணாலே
ரகசியம் பேசிக்கிட்டோம்
நாங்க ரெண்டு பேரும்
காதல் வலை வீசிப்புட்டோம்
சிக்கனமா
கண்ணாலம் முடிச்சிக்கிட்டோம்
அதை சீர்திருத்த முறையில
நடத்திப்புட்டோம்
பெத்தாலும்
ஒன்னு ரெண்டு
பெத்துபோடுவோம்
அதுக்கு ஒத்துமையா
ரெண்டு பேரும்
பாடுபடுவோம்
ஊதாரி
புள்ளைங்களை
பெக்க மாட்டோம்
அது ஊரு வம்பை
வாங்கும் படி வைக்க
மாட்டோம்
நாங்க புதுசா
நாங்க
புதுசா கட்டிக்கிட்ட
ஜோடிதானுங்க நல்ல
பாட்டு படிக்கும் வானம்
பாடிதானுங்க
ஊரு விட்டு
ஊரு மாறி போவோமுங்க
ஆனா உங்களாட்டம் பேரு
கெட்டு போகமாட்டோம்
எல்லாருக்கும்
நல்லவரா இருப்போமுங்க
எங்க கொள்கையில
எந்நாளும் மாற
மாட்டோம்
நரி கொம்பு
வித்தாலும் விப்போமுங்க
ஆனா நரி போல வஞ்சனைகள்
செய்யமாட்டோம்
பாசி மணி ஊசி
எல்லாம் விப்போமுங்க
ஆனா காசுக்காக
மானத்தையே விக்க
மாட்டோம்
நாங்க
புதுசா நாங்க
புதுசா கட்டிக்கிட்ட
ஜோடிதானுங்க நல்ல
பாட்டு படிக்கும் வானம்
பாடிதானுங்க
படி அரிசி
கிடைக்கிற காலத்துல
நாங்க படியேறி பிச்சை
கேட்க போவதில்லே
குடிசையெல்லாம்
வீடாகும் நேரத்திலே
நாங்க தெருவோரம்
குடியேற தேவையில்லே
சர்க்காரு ஏழை
பக்கம் இருக்கையிலே
நாங்க சட்டதிட்டம் மீறி
இங்கு நடப்பதில்லே
எல்லாரும்
ஒன்னாக நினைக்கையிலே
நாங்க எதையும் எப்பவும்
இங்கு மறைப்பதில்லே
நாங்க புதுசா
நாங்க புதுசா கட்டிக்கிட்ட
ஜோடிதானுங்க நல்ல
பாட்டு படிக்கும் வானம்
பாடிதானுங்க
ஆ
புதுசா கட்டிக்கிட்ட
ஜோடிதானுங்க நல்ல
பாட்டு படிக்கும் வானம்
பாடிதானுங்க
ஏ சிங்கி
ஏ சிங்கா
ஏ சிங்கி
ஏ சிங்கா
பெ: நாங்க புதுசா..ஆ
நாங்க புதுசா, கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும், வானம்.பாடிதானுங்க
ஆ: நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும், வானம்.பாடிதானுங்க
ஆ&பெ: ஹ.. புதுசா…
கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும், வானம்.பாடிதானுங்க
டமுக்கடிப்பான் டீயாலோ
தமுக்கடிப்பான் லாயாலோ
டமுக்கடிப்பான் டீயாலோ
தமுக்கடிப்பான் லாயாலோ
ஆ: ஏ . சிங்கி…
பெ: ஏ … சிங்கா
ஆ: ஏ . சிங்கி..
பெ: ஏ … சிங்கா
ஆ: கண்.ணாலே ரகசியம் பேசிக்கிட்டோம்
நாங்க ரெண்டு பேரும்
காதல் வலை வீசிப்புட்டோம்
பெ: சிக்கனமா கண்ணாலம் முடிச்சிக்கிட்டோம்
அதை சீர்திருத்த முறையில நடத்திப்புட்டோம்
ஆ: பெத்தாலும் ஒன்னு.
ரெண்டு பெத்துப்.போடுவோம்
அதுக்கு ஒத்துமையா ரெண்டு
பேரும் பாடுபடுவோம்
பெ: ஊதாரி புள்ளைகளை பெக்க மாட்டோம்
அது ஊரு வம்பை வாங்கும்படி வைக்க மாட்டோம்
ஆ: நாங்க புதுசா…
ஆ&பெ: நாங்க புதுசா
கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும், வானம்.பாடிதானுங்க
பாடல்: நாங்க புதுசா கட்டிக்கிட்ட
பெ: ஊரு விட்டு ஊரு மாறி போவோமுங்க
ஆனா உங்களாட்டம் பேரு
கெட்டுப் போகமாட்டோம்
ஆ: எல்லோர்க்கும் நல்லவரா இருப்போமுங்க
எங்க கொள்கையிலே எந்.நாளும் மாறமாட்டோம்
பெ: நரிக் கொம்பு வித்தாலும் விப்போமுங்க
ஆனா நரி போல வஞ்சனைகள் செய்யமாட்டோம்
ஆ: பாசி மணி ஊசி எல்லாம் விப்போமுங்க
ஆனா காசுக்காக மானத்தையே விக்கமாட்டோம்
ஆ&பெ: நாங்க . புய்ஷா…ஆ.
நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும்
வானம்.பாடிதானுங்க..
பெ: படி அரிசி கிடைக்கிற காலத்துல
நாங்க படியேறி பிச்சை கேட்க போவதில்லே
ஆ: குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே
நாங்க தெருவோரம் குடியேற தேவையில்லே
பெ: சர்க்காரு ஏழை பக்கம் இருக்கையிலே
நாங்க சட்டதிட்டம் மீறி இங்கே நடப்பதில்லே
ஆ: எல்லாரும் ஒன்னாக நினைக்கையிலே
நாங்க எதையும் எப்பவும்
இங்கு மறைப்பதில்லே
ஆ&பெ: நாங்க புதுஷா
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும், வானம்.பாடிதானுங்க
ஹ… புதுசா
கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும், வானம்.பாடிதானுங்க
டமுக்கடிப்பான் டீயாலோ
தமுக்கடிப்பான் லாயாலோ
டமுக்கடிப்பான் டீயாலோ
தமுக்கடிப்பான் லாயாலோ
ஆ: ஏ . சிங்கி…
பெ: ஏ … சிங்கா
ஆ: ஏ . சிங்கி..
பெ: ஏ … சிங்கா
என்ற பாடலால் தமிழகத்துக்கு குருவிக்காரர் குடும்பங்களில் மட்டுமல்ல, அவர்கள் அனைவர்
மணங்களிலும், பச்சை குத்தலில் உடல்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
வளராதது அவர்கள் வாழ்க்கை தரம் மட்டும் தான்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் செயல் – அரசு இயந்திரத்தின் அத்துனை தளங்களிலும் – வியாப்பிப்பதின்
மூலம் தான் அர்த்தப்படும் என்பதை அரசு ஊழியர்கள், அதிகாரிகள் உணர வேண்டும்
நன்றி மறவாதவர்கள்
நரிக்குறவர் இன மக்கள்
நரி கொம்பு வித்தாலும் விப்போமுங்க
ஆனா – நரி போல வஞ்சனைகள் செய்ய மாட்டோம்
பாசி மணி ஊசி எல்லாம் விப்போமுங்க
ஆனா – காசுக்காக மானத்தையே விக்கமாட்டோம்’
-என்ற சினிமா பாடல் வரிகள்
வெறும் பாடல் மட்டுமில்லை
அவர்களின் வாழ்க்கை நெறியும் கூடதான!
நெஞ்சிக்குமரல்
2024 ம் ஆண்டு அந்திலி வெண்மணி நகரச் சேர்ந்த இரண்டு குருவிக்காரர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் வீரபாண்டிய நோக்கி இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற பொழுது, காமுக கழிசடைகள் இருவர் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் விரட்டிச் சென்று அவர்களை அச்சுறுத்திய பொழுது, தேவனூர் அருகே வண்டியை கீழே போட்டு விழுந்த இளம் பெண்கள், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது, அன்பே உருவான இயேசு கிறிஸ்துவின் வழித்தோன்றலாய் நின்ற சார்லஸ் என்ற உதவி ஆய்வாளர், குருவிக்கார இன பெண்களைப் பார்த்து நீங்க எல்லாம் அவ்வளவு பெரிய அழகா உங்கள தொரத்தினு வந்துட்டாங்க, பொய் சொல்லாதீங்க முதல்ல வெளியே போ என விரட்டி அடித்தார் – இப்படியும் சமூகத்தின் பொது புத்தி தொடர்கிறது,
அரகண்டநல்லூரில் உள்ள திருக்கோவிலூர் ரயில் நிலையம் பல தலைமுறைகளாக குடியிருந்த 18 நரிக்குறவர் குடும்பங்கள், ரயில் நிலைய விரிவாக்கத்தான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர், அதன் பொருட்டு அங்கிருந்து வெளியேறி அருகாமையில் அங்குட்டு வருவாய் கிராமம் எல்லையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் குடியேறி பல தலைமுறைகளாக வசித்து வந்த குருவிக்கார இன மக்களுக்கு 18 குடும்பங்களுக்கு அரசியல் இலவச குடிமனை பட்டா அவர்கள் குடியிருந்தால் அவ்விடத்தில் வழங்கியது. அதிகார வர்க்கம் வழங்கப்பட்ட பட்டாவை கிராம கணக்கு ஏற்றாத விளைவு



தொடரும்- (234 பக்கங்கள்)