திறப்பு விழாவுக்காகக் காத்திருப்பது திருக்கோவிலூரில் புதிதாகக் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அரசு பொது மாவட்ட மருத்துவமனை மட்டுமல்ல சேவை பெரும் 10 லட்சம் மக்களும் தான்
திறப்பு விழாவுக்காகக் காத்திருப்பது திருக்கோவிலூரில் புதிதாகக் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அரசு பொது மாவட்ட மருத்துவமனை மட்டுமல்ல சேவை பெரும் 10 லட்சம் மக்களும் தான்

11/05/2026 கள்ளக்குறிச்சி மாவட்டம் / திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 10 லட்சம் மக்கள் பயன்பெறும், திருக்கோவிலூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு பொது மருத்துவமனை, நவீன வசதிகளுடன் தயார் நிலையில் இருந்தாலும், திறப்பு விழாவுக்காகக் காத்திருக்கிறது. சுமார் 65,000 சதுர அடி பரப்பளவில், 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 160 படுக்கைகளில் இருந்து 225 படுக்கை வசதிகளுடன் இந்த மருத்துவமனை மேம்படுத்தப்பட்டுள்ளது.
சி.டி. ஸ்கேன், அவசர சிகிச்சை, மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவுகள், மற்றும் நவீன அறுவை சிகிச்சை அரங்குகளுடன் இந்த அரசு மருத்துவமனை தயாராக உள்ளது. கடந்த 2025 நவம்பர் மாத நிலவரப்படி, குறுகிய காலத்தில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட, இந்த மருத்துவமனை இன்னும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரவில்லை.மேம்பாடு,நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை அளிக்கும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதியில் உள்ள இந்த அரசு மருத்துவமனை, உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த மருத்துவமனை விரைவில் திறக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1951 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் – அரசியல் கட்சிகளின் கடமை தேர்தல் காலம் மட்டும் அல்ல, அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறை படுத்த வேண்டிய ஒவ்வொரு இமைப்பொழுதும் தான்
என்பதை ஆளும் கட்சி உணர்ந்து மருத்துவமனையை திறந்து சேவையை உடனடியாக பொதுமக்களுக்கு வழங்குவதும் – அதற்கான தூண்டுகோலாய் அரசியல் கட்சிகள் ஆண்ட கட்சிகள் செயல்படுவதும் என்பது மானுட மனசாட்சி மட்டுமல்ல கடமையும் என்பதை கண்ணியத்துடன் சீர்தூக்கி செயல்பட வேண்டும்
-களத்தில் (ஹலோ இந்தியா நியூஸ் தமிழ் இணையதளம்) https://helloindianewstamil.com – 9445102867


