நுகர்வோர் பாதுகாப்பு- சட்ட விழிப்புணர் Consumer Protection – legal awareness ————————————————————————-
நுகர்வோர் உரிமையும்,,, மனித உரிமையே!!

நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்,,. Consumer Protection – legal awareness.
நுகர்வோர் உரிமையும் மனித உரிமையே!!!

(1),நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்(1986-2019)
(2),பொருட்கள் விற்பனைச் சட்டம் 1930, (3),கள்ளச் சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்குதல் பராமரிப்புச் சட்டம் 1980)
(4),அகில உலக மனித உரிமைப் பிரகடனம் – 1948
(5),அய்க்கிய நாட்டவையின் மனித உரிமைக் காப்பளர்களுக்கான உரிமைப் பிரகடனம் – 1988

❤️திருடுவதை காட்டிலும் திருட்டுக்கு காரணமாய் இருப்பது பெருந்திருட்டு – மூதோர் சொல்❤️
அன்பு கருணை மனிதநேயம் என்ற மானுடம் மாண்புகள் அர்த்தம் பெறுவது சக உயிர்களுக்காக நாம் நம்மை அர்ப்பணித்து கொள்ளும் பொழுது தான், சக உயிர்களின் நலனில் தான் ஒவ்வொரு ஜீவனின் நலனும் உள்ளது என்பதை அறிவுடையோரால் மறுதலிக்க முடியாது
மானுட சமூகம் கருவறை முதல் கல்லறை ( இடுகாடு – சுடுகாடு ) வரையில் வாழும் பொருட்டு, ஜீவித்தலின் தொடர்ச்சியாக பண்டபரிவர்த்தனைகளின் ஈடுபடும் செயல்பாடுகள் வணிகம் என்ற பொருள் படுகின்றன, இச்செயல்பாட்டில் பொது மக்களே வணிகர்களாகவும், நுகர்வோர்களாகவும் அங்கம் வகிக்கின்றனர், ஒரு இடத்தில் வணிகராக உள்ளவர், பிற இடங்களில் நுகர்வோராகவும் உள்ளார்.
வணிகம் பல அரசுகளை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளதை மறுதலிக்க முடியாது – பல போர்களுக்கு காரணமானதை புறக்கணித்து விட முடியாது
❤️ஐயப்படாமல் முதன்மை படுத்த வேண்டிய மானுட மாண்பு “நுகர்வோர் நலன்”,,,,, அதுவே மனித உரிமையும் ஆகும்,,,,, அதுவே பிரபஞ்ச உயிர்களின் ஜீவித்தலுமாகும் என்பதை அறம் உடையோர் ஆரத் தழுவி பேணி வளர்ப்பர்.❤️
மனித வாழ்விற்கு நுகர்வு அவசியம். நுகர்வின்றி வாழ்க்கை இல்லை. அதேசமயம் மனிதன் தன் அறிவுத் திறனாலும் உழைப்பினாலும் பல வகையான பொருட்களை படைத்து உற்பத்தியை பெருக்குகின்றான். பல்லாயிரக்கணக்கான பொருட்கள் சந்தையில் விநியோகிக்கப்படும் பொழுது நுகர்வோராகிய நாம் வாழ்க்கையின் முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள குழம்பாமல் சரியான தேர்வு செய்தல் அவசியம். சரியான தேர்வு செய்ய விழிப்புடைய நுகர்வோராக இருத்தல் வேண்டும்.

முன்னுரை:-நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இந்தியாவிற்குப் புதிதல்ல. சரித்திர ஏடுகளை நாம் புரட்டிப் பார்த்தோமேயானால், நுகர்வோர் பாதுகாப்பு இந்தியப் பொருளாதாரத்தின் ஓர் அங்கமாகவே எல்லாக் காலங்களிலும் இயங்கி வந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வோம்.
சாணக்கியர் இயற்றிய “அர்த்தசாஸ்திரம்’ என்ற நூலும் கூட இதனை நமக்குத் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது. பொதுமக்கள் விலைவாசி உயர்வால் துன்பப்பட்டால், அதற்குக் காரணமான வர்த்தகர்கள் கடும் தண்டனைக்கு உள்ளானார்கள். சேவையாளர்களுக்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன. வர்த்தகர்களுக்கு இலாபத்தின் அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டது.
சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன்னரே, தரக்குறைவான பொருட்களை விற்கும் வணிகர்களுக்கு பொருட்களின் விலையை விட எட்டு மடங்கு அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அந்நியப் படையெடுப்பால், சீரான ஒழுங்குமுறை பின்பற்றப்படாமல், நுகர்வோர் பல துன்பங்களுக்கு ஆளானார்கள்.
இந்தியா அடிமைப்பட்டிருந்த காலத்தில் சுதந்திரத்திற்கு முன்னால் இந்திய பீனல் கோட் (1850) சட்டத்தின்படி விவசாயம் பாதுகாப்புப் பெற்றது. பின்னர், 1940ஆம் ஆண்டு மருந்துகளைப் பாதுகாப்பதற்காக ட்ரக்ஸ் அண்ட் காஸ்மெடிக்ஸ் ஆக்ட் கொண்டுவரப்பட்டது. பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் பல சட்டங்கள் இயற்றப்பட்டன. ஆனால் அவையெல்லாம் நுகர்வோர் சிவில் நீதிமன்றங்களை அணுகி தங்கள் புகார்களுக்குத் தீர்வு காண வேண்டியிருந்தது.

1972ஆம் ஆண்டு வரலாறு காணாத விலைவாசியேற்றமும், சோப்புகளுக்கும் உணவு பொருட்களுக்கும் கூட கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. கலப்படம் எங்கும் பரவியதை சினிமா பாடல்களில் கூட எதிரொலித்தது. நுகர்வோர் தங்களுக்குள் குழுக்கள் அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்கள். இதுபோல் சுமார் இருபதிற்கும் மேற்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் 1972 ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் தோன்றத் தொடங்கியது. எட்டு ஆண்டுகளுக்குப் பின்னும் நுகர்வோர் பிரச்சனை தீருவதாக தெரியவில்லை. உணவின் தரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புறச் சூழல்களினால், நுகர்வோருக்கு பிரச்சனைகள் அதிகமாகிக் கொண்டே இருந்தன. எனவே அந்தக் குழுக்களும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி செயல்பட்ட, அக்கறை கொண்ட அரசியல் கட்சிகளும் அரசாங்கத்தை வற்புறுத்தி வந்தது
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை 09-04-1985 அன்று நுகர்வோர் பாதுகாப்பிற்கான வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொண்டது. அதன் தொடர்ச்சியாக அனைத்து நாடுகளும் தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதன் பொருட்டு:-
❤️இந்திய அரசியலமைப்புச் சட்டம் 26 நவம்பர் 1949 அன்று உருவாக்கப்பட்டு, 26 ஜனவரி 1950 அன்று அமலுக்குவந்தது. இது 22 அத்தியாயங்கள், 12 அட்டவணைகள், 395 பிரிவுகளைக் கொண்டதன் அடிப்படையில்
இந்திய அரசியலமைப்பின் 39ஆம் பிரிவில் மாநில கொள்கையின் வழிகாட்டும் கோட்பாடுகள் கீழ், குடிமக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது,
எனவே, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் அரசியலமைப்பின் சமூக நியாயக் கொள்கையை நடைமுறையில் நிறைவேற்றும் சட்டமாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டமும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமும் இந்திய மக்களின் வாழ்க்கை, நியாயம், மற்றும் உரிமைகளுக்கான இரண்டும் முக்கிய சட்டங்களாகும்

இச்சட்டம் நடைமுறையில்,,,,
நுகர்வோர் நலன்களை பாதுகாக்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. இச்சட்டத்திற்கு பதிலாக புதிய மசோதா ஒன்று 2019 ஆகஸ்ட் 8-ம் தேதி, மாண்புமிகு மத்திய நுகர்வோர் நலன் மற்றும் உணவுத்துறை அமைச்சர் இராம்விலாஸ் பஸ்வான் அவர்களால் மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. பின்பு இந்த மசோதா மாநிலங்கள் அவையிலும் வெற்றிகரமாக நிறைவேறியது. இந்த நுகர்வோர் பாதுகாப்பு மசோதா 2019 நுகர்வோர்களின் தனிநபர் புகார்களையும், விசாரித்து தீர்வு செய்யும் வகையில் அமைந்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986-க்கும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019க்கும் உள்ள சிறப்பு அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும், இதன் பொருட்டு அரசு பல்வேறு வகைகளில் நுகர்வோர் ஆகிய பொதுமக்களுக்கு தெளிவு படுத்தி விளக்கி வருகிறது, அதன் தொடர்ச்சியாக சில செயல்பாட்டாளர்களும், NGO க்களும் இம்மகத்தான பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு செயல்படுத்தி வருகிறார்கள்

இதன் நோக்கம் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதாகும். உயிருக்கும், உடைமைகளுக்கும் அபாயம் விளைவிக்கும் பொருட்களில் இருந்து பாதுகாப்பு பெறும் உரிமை.
பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த தரம், விலை, தூய்மை போன்ற விவரங்களை அறிந்து கொள்ளும் தகவல் பெறும் உரிமை
பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த தேர்வு செய்யும் உரிமை, குறை தீர்க்கும் உரிமை, ஒரு நுகர்வோர் பொருள் குறைவு காரணமாக வழக்கு தொடர உரிமை பெறலாம்
நுகர்வோர்கள் தமது உரிமைகளை அறிந்து கொள்ளும் உரிமை, 2019 ஆம் ஆண்டின் சட்ட திருத்தத்தின் மூலம் இ-காமர்ஸ் தளங்களும் இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இது நுகர்வோர் புகார்களை விரைவாக தீர்க்க மத்திய மற்றும் மாநில, மாவட்ட நுகர்வோர் மன்றங்கள் வழியாக செயல்படுகிறது.
இந்த சட்டம் உலகத்தில் சில நாடுகளில் மட்டுமே இயற்றப்பட்டது. அதில் ஒன்றான இந்தியா, தனித்தன்மையான தனி நபர் பாதுகாப்பிற்காக, தரமற்ற பொருட்கள். தரமற்ற சேவையாளர்களை தண்டிக்கவும். நுகர்வோருக்கு நீதி வழங்கவும் இயற்றப்பட்ட மிகச் சிறந்த சமுதாய நலச்சட்டமாகும்.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 இன் முக்கிய சிறப்பம்சங்கள், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தை (CCPA) நிறுவுதல், நுகர்வோர் உரிமைகளை விரிவுபடுத்துதல், இ-காமர்ஸ் சேவைகளுக்குப் பொருந்தும் வகையில் விதிகளை விரிவுபடுத்துதல், மற்றும் பொருட்கள் பொறுப்பு கொள்கையை அறிமுகப்படுத்துதல் ஆகியவை ஆகும். இந்த சட்டம், பழைய சட்டம், 1986-க்கு பதிலாக கொண்டுவரப்பட்டது, மேலும் நுகர்வோர் தகராறுகளைத் தீர்ப்பதற்கான செயல்முறைகளை மேலும் வலுப்படுத்துகிறது.
முக்கிய சிறப்பம்சங்கள்:-
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA): நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, மத்திய அரசால் ஒரு ஆணையம் நிறுவப்பட்டுள்ளது. இது பாதுகாப்பற்ற பொருட்கள் மற்றும் சேவை தொடர்பான விஷயங்களில் வழக்குத் தொடுக்கும் அதிகாரத்தையும், தீங்கு விளைவிக்கும் விளம்பரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தையும் கொண்டுள்ளது.
இ-காமர்ஸ் பாதுகாப்பு:- ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மற்றும் பிற மின்னணு வர்த்தகங்களில் ஏற்படும் மோசடிகளைச் சமாளிக்க, இந்தச் சட்டம் இ-காமர்ஸ் செயல்முறைகளை உள்ளடக்கியுள்ளது.
பொருட்கள் பொறுப்பு: – தயாரிப்பு குறைபாடுகளால் நுகர்வோருக்கு ஏற்படும் இழப்புகளுக்கு உற்பத்தியாளர்கள், சேவைகள் வழங்குபவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பொறுப்பாவார்கள் என்ற கொள்கையை இந்த சட்டம் அறிமுகப்படுத்துகிறது. இது நுகர்வோருக்கு இழப்பீடு பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
குற்றவிசாரணை மற்றும் தீர்வு:- நுகர்வோர் தகராறுகளைத் தீர்ப்பதற்கான பல புதிய விதிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. நுகர்வோர் குறை தீர்ப்பதற்கான அதிகார வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, மேலும் தீர்வு தொடர்பான காலம் குறைக்கப்பட்டுள்ளது.
மத்தியஸ்தம் (Mediation): – தகராறுகளை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்ப்பதற்கான ஒரு மாற்று வழியாக மத்தியஸ்தத்தை இந்த சட்டம் ஊக்குவிக்கிறது.
ஏமாற்றுதல் மற்றும் தவறான விளம்பரங்கள்:- மோசடி அல்லது தவறான விளம்பரங்களுக்கு எதிராக கடுமையான விதிகளை சட்டம் கொண்டுள்ளது, இது நுகர்வோருக்கு சரியான தகவல்களைப் பெறுவதை உறுதி செய்கிறது.
நுகர்வோர் உரிமைகளை விரிவுபடுத்துதல்:- பாதுகாப்பு, தகவல், தேர்வு, கருத்து தெரிவித்தல், நிவாரணம் மற்றும் நுகர்வோர் கல்வி ஆகிய உரிமைகளுடன், இந்த சட்டம் நுகர்வோர்களின் உரிமைகளை மேலும் விரிவுபடுத்துகிறது.
40 ஆண்டுகளுக்குப் பின்னரும், மக்களில் பெரும்பாலோர் இந்த சட்டத்தையும் அதன் நன்மைகளையும் அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
தன்னை நுகர்வோர் என தெளிவுபடுத்திக் கொள்கின்ற ஒவ்வொரு தனிமனிதனும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் என்ன என்பது குறித்து அவசியம் தெரிந்து வைத்திருக்கவேண்டும். இந்த நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் என்பதனை நடைமுறை சாத்தியமற்ற ஒரு சட்டமாக கருதாமல், மிக எளிமையாக அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக, அனைவருக்கும் புரியும் வண்ணம் அதன் சிறப்பு அம்சங்களை எடுத்துக் கூறும் வகையில், சேவை, புகார், நீதிமன்றங்கள், வழக்குகள், குறைதீர் ஆணையம் போன்ற சொற்றொடர்களுக்கு தேவையான விளக்கங்கள் உதாரணங்களுடன், புகார் மற்றும் வழக்குகள் தொடர்பாக நுகர்வோர் யாரை, எவ்வாறு அணுக வேண்டும் என்பதனை மனதில் கொண்டு முக்கிய முகவரிகளும்
வழங்கப்பட்டு, ஒவ்வொரு நுகர்வோரும், இச்சட்டத்தினை மிக எளிதாக படித்து பயன்பெறுவதோடுபாமரர்க்கும், பொருளின் சேவையை அனுபவிப்பதனால் ஏற்படக்கூடிய சேவை குறைபாடுகளை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த
வேண்டும் என்ற உன்னத நோக்கில், களத்தில் உங்களுடன் கைகோர்த்து நுகர்வோர் ஆகிய பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு,,,,,
(1)மாவட்ட அளவிலான நுகர்வோர் நீதிமன்றங்கள்: மாவட்ட அளவிலான கமிஷன்களில், ஒரு நுகர்வோர் புகார்களைத் தரலாம், இதில் சம்பந்தப்பட்ட மதிப்பு ரூ .1 கோடி வரை இருக்கும்.
(2)மாநில அளவிலான நுகர்வோர் நீதிமன்றங்கள்: ஒரு நுகர்வோர் மாநில அளவிலான கமிஷன்களில் புகார் அளிக்கலாம், இதில் மதிப்பு 1 கோடி முதல் 10 கோடி வரை இருக்கும்.
(3)தேசிய நுகர்வோர் நீதிமன்றம்: தேசிய அளவிலான கமிஷன்களில், ஒரு நுகர்வோர் 10 கோடிக்கு மேல் மதிப்புள்ள புகார்களைப் பதிவு செய்யலாம்.

நுகர்வோர் தகராறுகளைத் தீர்ப்பதற்காக மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நுகர்வோர் தங்களது உரிமைகள் மீறப்பட்டதாகக் கருதினால், நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் புகார் அளிக்கலாம், உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தைத் தவிர, பொருட்கள் விற்பனைச் சட்டம் 1930, கள்ளச் சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்குதல் பராமரிப்புச் சட்டம் 1980 போன்ற பிற சட்டங்களும் உள்ளன. வாருங்கள் கண்ணியமிக்க மானுட சமூகம் அமைய களத்தில் கைகோர்ப்போம்

நட்புடன்:-. ARK,தமிழ்ச்செல்வன், BA.,(P-A).TDJ.,BA,.LLB., Managing Director ( Hello India legal Awareness, education self employment guide social developmentTrust). Cell:- 9445102867, 9443441683Email:arkdemocracy45@gmail.com.web:- https://helloindianewstamil.com
. (2)
1. நுகர்வோர் யார்? நாம் எல்லோரும் நுகர்வோரே. பிறக்கும்போதும். வாழும்போதும் ஏன் இறந்தபின்னரும் நாம் நுகர்வோர்தாம். ஏனென்றால், நாம் பயன்படுத்தும் ஒவ்வொன்றிற்கும். விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. பொருளானாலும், சேவையானாலும், காசு கொடுத்துதான் வாங்குகிறோம். தற்போது குழந்தைக்கு, தண்ணீர் கூட விலை கொடுத்துதான் வாங்குகிறோம். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986ன் படி. பகுதி 2(1) (d) பிரிவின்படி யார் காசு கொடுத்து பொருளையோ, சேவையையோ வாங்குகிறார்களோ அவர்கள் நுகர்வோர்கள். விரிவாகச் சொல்வதானால்,
(A) காசு கொடுத்து பொருள் வாங்குகிறவர். நுகர்வோர்.
(B)காசு கொடுத்து சேவையை அனுபவிக்கிறவர். நுகர்வோர்.
(C) பொருளுக்கு விலை கொடுக்கப்பட்டிந்தால், பொருளை ஆள்பவர் நுகர்வோர். உதாரணமாக குழந்தைக்கு, பால் பவுடர், தந்தை காசு கொடுத்து வாங்கினாலும், அதை அனுபவிக்கும் குழந்தைதான் நுகர்வோர்
(D) காசு கொடுத்து சேவையை வாங்காவிட்டாலும், காசு கொடுத்தது எவராக இருந்தாலும், சேவையை அனுபவிப்பவர் நுகர்வோர். உதாரணமாக, மகன். மகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக தந்தை பணம் கொடுத்தாலும், மருத்துவ சிகிச்சை பெற்ற மகன். மகள் இருவரும் தான் நுகர்வோர்கள். சுருங்கச் சொல்ல வேண்டுமானால், பொருள். சேவை இரண்டிற்கும் காசு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
(E)பொருட்களையோ அல்லது சேவைகளையோ,விலை கொடுத்தோ
வாக்குறுதி கொடுத்தோ ஒரு பாதி பணம் செலுத்தி மறுபாதி வாக்குறுதி கொடுத்தோ பொருட்களை வாங்கி, பயன்படுத்துபவரையும் சேவைகளை அனுபவிப்பவரையும் நுகர்வோர் என்கிறோம்.
எனவே, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் கொடுத்து பொருட்களை வாங்குபவர்களாகவும் சேவைகளை அனுபவிப்பவர்களாகவும் உள்ள நாம் அனைவரும் நுகர்வோரே.
உதாரணமாக, ஒருவர் கடைக்கு சென்று மொபைல் போன் விலை கொடுத்து வாங்கினால் அவர் நுகர்வோர் ஆகிறார்.
அதேபோல், பணம் கட்டி தொலைபேசி சேவைகளை (BSNL, ARTS: போன்ற கம்பெனிகளின்) பெறும்போது ஒருவர் நுகர்வோர் ஆகிறார்.
ஒருவர் தவணை முறையில். ஒரு பாதி பணம் செலுத்தி, இரு சக்கர வாகனம் வாங்கினாலும் அவர் நுகர்வோர் ஆவார். இன்னும் கூறப்போனால், ஒரே ஒரு ரூபாய் கொடுத்து ஒரு பொருளையோ, சேவையையோ வாங்கினாலும் நாம் நுகர்வோர் ஆகிறோம்
எனவே, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் கொடுத்து பொருட்களை வாங்குபவர்களாகவும் சேவைகளை அனுபவிப்பவர்களாகவும் உள்ள நாம் அனைவரும் நுகர்வோரே.
2 தரமற்றப் பொருள் என்றால் என்ன?
சிறிய அல்லது பெரிய குறைபாடு, முழுமை பெறாத. தரக்குறைவான, எடைக்குறைவான. இந்திய பொருட் பாதுகாப்பு சட்டங்களுக்கு உட்படாததான பொருட்கள் பொதுவாக ஓர் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை பொருட்களுக்கு உத்தரவாதம் அவைகளின் தரத்திற்கு கொடுக்கப்படுகிறது. இந்த உத்திரவாத ஆண்டுகள் முடிவதற்கு முன். பொருட்களில் தரக்குறைவு கண்டால், அது தரமற்றப் பொருள் வரிசையில் சேர்க்கப்படும்.
3. சேவைக் குறைபாடு என்றால் என்ன?
சேவைக் குறைபாடு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986இல், பகுதி 21 (g) பிரிவின்படி காசு கொடுத்து சேவை பெற்றுக் கொள்வது, சேவையில் வாக்களித்தபடி சேலை கொடுக்கப்படாமல், இன்னல்களுக்கு ஆளாக்குவது உதாரணமாக, பேருந்துப் பயணத்தின்போது, காசு கொடுத்தே பேருந்தில் பயணிக்கிறோம். அவ்வாறு பயணிக்கும்போது, ஓட்டுநர், நடத்துனர் நம்மை தரக்குறைவான வார்த்தைகளால் ஏசும் போது, அது சேவைக் குறைபாடு ஆகிறது. இதில் தொலைபேசி காப்பீடுகள், மருத்துவம். அஞ்சலக போக்குவரத்து சேவைகள், உணவு விடுதி சேவைகளும் அடங்கும்.
4. புகார் எங்கே செய்ய வேண்டும்?
புகாரின் தன்மையைப் பொறுத்து மாவட்ட மாநில, தேசிய நுகர்வோர் குறை தீர் ஆணையங்களிடம் புகார் செய்யலாம்.
கோரும் நஷ்ட ஈட்டுத் தொகை ரூபாய் 20 லட்சத்திற்கு குறைவாக இருந்தால், மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திலும், ரூபாய் ஒரு கோடிக்கு குறைவாக இருந்தால் மாநில நுகர்வோர் குறை தீர் ஆணையத்திலும், ரூபாய் ஒரு கோடிக்கு மேற்பட்டு இருந்தால் தேசிய நுகர்வோர் குறை தீர் ஆணையத்திடம் நேரிடையாக புகார் செய்யலாம்.
5. நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உண்டா?
நுகர்வோர் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2002இன்படி தேசிய, மாநில நுகர்வோர் மன்றங்கள். தங்கள் தலைமையகத்திற்கு வெளியேயும் செயல்படலாம். தடை உத்தரவு பிறப்பிக்க இந்த திருத்தம் வழி செய்கிறது.
6. மாவட்ட நுகர்வோர் நீதி விசாரணை பீடம் என்றால் என்ன?
இந்தியாவில், பெரும்பாலான மாவட்டங்களில், நுகர்வோர் குறை தீர்ப்பதற்காக, மாவட்ட நுகர்வோர் குறை தீர், நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
7. மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் என்றால் என்ன?
இந்தியாவில் முப்பத்திநாலு, மாநில நுகர்வோர் குறை தீர் ஆணையங்கள் இயங்குகின்றன.
8. தேசிய நுகர்வோர் குறை தீர் ஆணையம் என்றால் என்ன?
இந்தியாவில், தேசிய நுகர்வோர் குறை தீர் ஆணையம், இந்தியத் தலைநகர் தில்லியில், ஜனபத், ஜனபத்பவன் பீ விங்கில், 7வதுமாடியிலும், ஆ விங்கில் 5வது மாடியிலும் செயல்படுகிறது.
9. யார் யார், புகார் செய்யலாம்?
எந்தத் தனி நபரும், எந்தத் தொண்டு நிறுவனமும் புகார் செய்யலாம்.
10. வழக்கறிஞர், புகாரை வாதாடத் தேவையா?
தேவையில்லை. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986இன் மிகச் சிறந்த பிரிவு இதுதான். இதன் மூலம் நுகர்வோரே தங்கள் புகார்களை மிகச் சிறந்த முறையில், தலைவர் மற்றும் மெம்பர் முன் வாதாடலாம். ஆனால் தூதிருஷ்டவசமாக, எதிர் தரப்பினர் வழக்குரைஞர்களை வைத்து வாய்தாக்கள் வாங்கிக் கொண்டே புகார்கள் இழுத்தடிக்கப்படுகின்றன. இந்நிலை மாற எதிர் தரப்பினரே வந்து வாதாட வேண்டும் என்று சட்டத் திருத்தம் கொண்டு வந்தாலொழிய நுகர்வோர் வழக்குகளின் கால தாமதத்தைத் தவிர்க்க முடியாது. தனிநபர்கள் தற்போது பெரிய நிறுவனங்களுடன் போட்டி போட முடிவதில்லை. பெரும்பாலான புகார்கள். ஒரு நாள் அல்லது ஒரு வாரத்திலேயே தீர்க்கப்பட வேண்டியதாக. எளிதான புகார்கள்தாம்.
11. அடுக்கு மாடி குடியிருப்புகளின், கால உத்தரவாதம் என்ன?
அடுக்கு மாடி குடியிருப்புகள். கட்டிய நாளிலிருந்து இரண்டு வருடங்கள் உத்தரவாத காலமாகும். அதற்குள் ஏதேனும் குறைபாடு காணப்பட்டால், அவருக்கு மாடி குடியிருப்புகள் கட்டியவர் பொறுப்பு ஏற்க வேண்டும்.
12. ரேஷன் அட்டைகள் வைத்திருப்பவர்கள் நுகர்வோரா?
ஆம். ரேஷன் பொருட்களை, அவர்கள், காசு கொடுத்துதான் வாங்குகிறார்கள்.
13. அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் நுகர்வோரா?
இல்லை. இலவச மருத்துவ வசதி பெறுவதால், அவர்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நுகர்வோர் இல்லை. ஆனால், அவர்கள் மருத்துவ சிகிச்சை பெறும்போது, எந்த இடத்திலாவது பணம் கொடுத்து (அது ஒரு ரூபாயாக இருந்தாலும்) ரசிது பெற்றிருந்தால் அவர் நுகர்வோர் ஆகிறார். இப்புத்தகத்தின் நோக்கம், நுகர்வோரின் அறியாமையைப் போக்குவதுதான் அவர்கள் சந்தைகளிலும், மற்றுமுள்ள இடங்களிலும், வர்த்தகளால் ஏமாற்றப்படாமல் இருக்க அவர்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். விழிப்புணர்வுள்ள நுகர்வோருக்கு ஏமாற்றங்களும் குறைவுதான். ———————————————————————–
(3)

