குற்றம்

கடமை தவறிய துணை மின் பொறியாளர் வெற்றிவேந்தன் (விழுப்புரம் தெற்கு) மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019?

கடமை தவறிய துணை மின் பொறியாளர் வெற்றிவேந்தன் (விழுப்புரம் தெற்கு) மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?

பொதுமக்கள் துன்பம் தீருமா? 

கையறு நிலையில் IPC பிரிவு 166 (பொது அலுவலர் தொடர்பான குற்றம்) என்பது BNS பிரிவு 198-?

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019?

ஜூலை 22 /2025 

விழுப்புரம் சர்வேயர் நகர் கனிமொழி (மின் இணைப்பு எண் : 024060181450) கடந்த ஜனவரி – 2025 மாதம் புதிதாக மீட்டர் பாக்ஸை மாற்றியுள்ளார்,

மீட்டர் பாக்ஸ் மாற்றியதிலிருந்து வழக்கத்தைவிட மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளது,

கடந்த மாதம் மின் கட்டணம் ரூ.11,097 கட்டியுள்ளார், இதனால் ஒரு எல்க்ட்ரிசியணை வைத்து ஆய்வு செய்து உள்ளார் அப்பொழுது மீட்டர் பாக்ஸ் நிறுத்தினாலும் வீட்டில் மின்சாரம் வருகிறதை கண்டறிந்துள்ளார்,

இதனை தொடர்ந்து கனிமொழி அவர்கள் விழுப்புரம் தெற்கு மின் பொறியாளர் அலுவலகத்தில் தனது மீட்டர் பாக்ஸை ஆய்வு செய்யும் படி கடந்த 08.07.2025 அன்று மனு அளித்துள்ளார்,

பல முறை நேரில் சென்று வெற்றி வேந்தன் AE அவர்களை சந்தித்து வாய்மொழியாகவும் எழுத்து மூலமும் முறையிட்டுள்ளார், அதற்கு வெற்றி வேந்தன் அவர்கள் ஒவ்வொரு முறையும் நான் ஆய்வு செய்ய ஆள் அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு, பொறுப்பற்ற முறையில் இது நாள் வரை காலம் கடத்தி வந்துள்ளார்,

இப்படி பொது மக்களின் மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல், செயலற்று முடங்கி இருக்கும், கடமை தவறிய வெற்றி வேந்தன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா…. பாதிக்கப்பட்ட கனிமொழிக்கு மனுவுக்கு தீர்வு கிடைக்குமா சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்,

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button