Uncategorized

மதவெறி – கார்ப்பரேட் பாஜக அரசுக்கு பாடம் புகட்டுவோம்! ஜூலை 9 வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றிபெறச் செய்வோம்.  சிபிஐ (எம்) வேண்டுகோள்

மதவெறி - கார்ப்பரேட் பாஜக அரசுக்கு பாடம் புகட்டுவோம்! ஜூலை 9 வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றிபெறச் செய்வோம்.சிபிஐ (எம்) வேண்டுகோள்

மதவெறி – கார்ப்பரேட் பாஜக அரசுக்கு பாடம் புகட்டுவோம்! ஜூலை 9 வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றிபெறச் செய்வோம்

மதவெறி – கார்ப்பரேட்
பாஜக அரசுக்கு பாடம் புகட்டுவோம்! ஜூலை 9 வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றிபெறச் செய்வோம்.  சிபிஐ (எம்) வேண்டுகோள்

ஜூலை 7, 2025
மதவெறி- கார்ப்பரேட் பாஜக அரசுக்கு பாடம் புகட்டுவோம்!
தமிழக மக்களுக்கு சிபிஐ (எம்) வேண்டுகோள்

சென்னை, ஜூலை 7 – கார்ப்பரேட் – இந்துத்துவ பாஜக அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றிபெறச் செய்யுமாறு தமிழக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தொழிலாளர்க்கு விரோதமான நான்கு சட்டத்தொகுப்புகள் இந்தியா முழுவதும் ஜூலை 9 அன்று அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் மற்றும் தொழில்வாரி சம்மேளனங்கள் இணைந்து பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்தம் பாஜக தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு அமலாக்கத் துடிக்கும் தொழி லாளர்களுக்கு விரோதமான நான்கு சட்டத் தொகுப்புகளை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்துவதாகும். மேலும், குறைந்தபட்ச ஊதியம், பழைய பென்சன் திட்டம், மின்சா ரத்தை தனியார்மயம் மற்றும் கார்ப்ப ரேட் கைகளுக்கு வழங்கும் மின்சார சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும், பொதுத்துறை பாதுகாப்பு, விவசாய விளைப் பொருட்களுக்கு மொத்த உற்பத்தி செலவில் ஒன்றரை மடங்கு விலை, 100 நாள் வேலைக்கு உரிய நிதி வழங் குதல், வரலாறு காணாத விலை வாசி உயர்வு களை கட்டுப் படுத்துதல் உள்ளிட்டு விவ சாயிகள், விவ சாயத் தொழிலா ளர்கள், அமைப்பு சாரா தொழி லாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் 17 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கி இருக்கிறது. வலுமிக்க கூட்டுப் போராட்டமே நாட்டைப் பாதுகாக்கும்! கடந்த 11 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் மோடி தலைமையிலான பாஜக அரசு, பெரும்பான்மை மக்க ளுக்கு எதிரான கொள்கையை அம லாக்கி வருகிறது. இதை எதிர்த்த தொழிலாளர் போராட்டங்கள் தொழி ல்வாரியாகவும், தனித்தனியாகவும் நடைபெற்றாலும், அனைத்து தொழி லாளர்களும் கூட்டாக இணைந்து, வலு மிக்க பொது வேலைநிறுத்தம் செய் வது, ஆட்சியாளர்களை வலுவாக எதிர்த்து நிற்கும் போராட்டமாகும். இப்படிப்பட்ட தீவிர எதிர்ப்பு, தொழிலாளர்களையும், தொழிற் சங்கங்களையும், பாதுகாக்கும் அர ணாக விளங்குவதுடன், கொள்கை மாற்றத்திற்கும், நிர்ப்பந்தம் அளிக்கும். எனவே தான், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஜூலை 9 பொது வேலைநிறுத்த அறிவிப்பை வரவேற்றது. வெற்றிப் பெறச் செய்ய வேண்டுமென்ற வேண்டுகோளையும் விடுத்தது. அனைத்து உழைப்பாளி மக்களும் அணிதிரள்வீர் நாடு முழுவதும் இதர இடதுசாரி கட்சிகளும், அரசியல் அமைப்புகளும் வேலைநிறுத்த போராட்டத்தை ஆதரித்து உள்ளன. விவசாயிகள் சங்கங்கள், விவசாயத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு வெகு மக்கள் அமைப்புகள் சார்பில் ஜூலை 9 அன்று நடைபெறவுள்ள தொழி லாளர் வேலைநிறுத்தத்தை ஆதரித்து மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் பங்கெடுப்பது என்ற அறிவிப்பு வரவேற்பிற்குரியது. ஜூலை 9 பொது வேலைநிறுத்தத் தின் வெற்றி பாஜகவின் கார்ப்பரேட் இந்துத்துவா ஆட்சியை எதிர்க்கும் வலுவான ஆயுதம் ஆகும். எனவே, இந்த பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழகத்தில் வெற்றி பெறச் செய்வோம் என இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அனைத்துப் பகுதி உழைப்பாளி மக்களையும், பொதுமக்களையும் அறைகூவி அழைக்கிறது. என சிபிஐ (எம்) தமிழ் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button