குறள் கூறும் கோமகன் அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் திரு சங்கர் அவர்கள்
குறள் கூறும் கோமகன் அரகண்டநல்லூர்காவல் ஆய்வாளர் திரு சங்கர் அவர்கள்,
2026 மே 11 –
செயல் அது ஒன்றே சிறந்தது எர்னஸ்டோ சேகுவாராவின் ரத்தமும் சதையுமான வரிகள் – செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது (குறள் 101 – செய்ந்நன்றி அறிதலில் வள்ளுவரின் வாக்குக்கு ஒப்பாக,,
“சுத்தம் தெய்வீகத்திற்கு அடுத்தது” (Cleanliness is next to godliness) என்பது ஒரு பழமொழி மட்டுமல்ல, அது ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான சமூக வாழ்க்கையின் அடிப்படையாகும். மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள், சுதந்திரத்தை விட துப்புரவு முக்கியம் என்று வலியுறுத்தினர். தன்னை நேசிப்பவர்கள் பிற உயிர்களையும் நேசிப்பார்கள், தன்னை அலங்கரித்துக் கொள்பவர்கள், சமூகத்தையும் அலங்கரிப்பார்கள், சமூகத்தின் அலங்காரம் மகொத்துவம் மிக்கது
சமூக நலனுக்குத் தூய்மை ஏன் இன்றியமையாதது?
நோய்த்தடுப்பு மற்றும் ஆரோக்கியம்:- சுத்தமான சூழல் கிருமிகளின் பரவலைத் தடுத்து, தொற்றுநோய்களில் இருந்து மக்களைக் காக்கிறது. உடல் மற்றும் சுற்றுப்புறத் தூய்மை, நோயற்ற சமுதாயத்தை உருவாக்குகிறது.
மனத்தெளிவு மற்றும் ஒழுக்கம்:-உடல் மற்றும் மனத் தூய்மை (Inner and outer cleanliness) நேர்மறை எண்ணங்களையும், ஒழுக்கத்தையும் வளர்க்கிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு:- வீட்டை மட்டுமல்லாது, பொது இடங்கள், தெருக்கள், நீர்நிலைகள் மற்றும் இயற்கையைப் பாதுகாப்பது சமூகப் பொறுப்புணர்வு ஆகும்.
உற்பத்தித்திறன் அதிகரிப்பு:- தூய்மையான சூழல் மகிழ்ச்சியான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க (Productive) சமூகத்தை உருவாக்குகிறது.
சுயமரியாதை: – தனிநபர் சுகாதாரம் (குளித்தல், சுத்தமான ஆடைகள்) மற்றும் சமூக சுகாதாரம், ஒருவரின் சுயமரியாதையை மேம்படுத்துகிறது.
தூய்மை என்பது வெறும் உடலைச் சுத்தமாக வைப்பது மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ள சூழலை சுத்தமாகப் பேணுவதும் ஆகும். இத்தகைய பழக்கவழக்கங்கள் நம்மைப் பண்பட்ட சமுதாயமாக உயர்த்துகின்றன, இவைகளுக்கு எடுத்துக்காட்டாய் அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் திரு சங்கர் அவர்களின் செயல்பாடுகள்,
புகழொடு நன்றி பயவா வினை
என்றும் ஒருவுதல் வேண்டும். – (குறள் 652 – பொருட்பால்)
எண்ணம் (மனம்), செயல், மற்றும் உறவு (இனம்) ஆகிய மூன்றிலும் தூய்மையாக இருப்பதே சிறந்த வாழ்க்கை என வள்ளுவர் வலியுறுத்துகிறார். அதன் பொருட்டு அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் திரு சங்கர் அவர்களின் செயல்பாடுகள்
1, அரகண்டநல்லூர் காவல் குடியிருப்பு பகுதி, காற்றோட்டமான ஆளும் அரசும் அழகிய அழகாய் அமைந்த பகுதி, இயற்கை வளங்களை சமூகம் பரிவர்த்தனை செய்து கொள்வதில் சிந்திப்பு மரவுகளால், சிறைபிடிக்கப்பட்ட மாட்டு மணல் வண்டிகள் நிரம்பி இவ்வளாகவே குப்பை கிடங்காய் பல ஆண்டுகளாய் சிறைபட்டு கிடந்ததை விடுவித்து வளாகத் தூய்மை ஏற்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது, மனித மனங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கண் கொள்ளா காட்சியாக கண் முன் விரிந்து கிடக்கிறது அழகாய் விழுதுகளைக் கொண்ட ஆளும் – அரச மரமும்.
மனிதர்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் உடற்பயிற்சியும் விளையாட்டும், இவ்வளாகத்தில் ஷெட்டில் கோர்ட்டும் – நடைப்பயிற்சிக்கான தளமும் – கண்முன்னே விரிந்து கிடக்கிறது
விளையாட்டு என்பது வெறும் உடல் சார்ந்த செயல்பாடு மட்டுமல்ல, அது உடல் மற்றும் மன வலிமையை மேம்படுத்தும் ஒரு முழுமையான பயிற்சியாகும்.விளையாட்டின் மூலம் ஏற்படும் நன்மைகள், உடல் வலிமை & ஆரோக்கியம், தொடர்ந்து விளையாடுவதால் உடல் உறுதியாவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.நுரையீரல் செயல்பாடு மேம்பட்டு, உடல் புத்துணர்ச்சி பெறுகிறது.வழக்கமான உடற்பயிற்சி, தசை வலிமை மற்றும் உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டை அதிகரிக்கிறது.சிந்தனை மற்றும் மன வலிமை:விளையாட்டு மூலோபாய சிந்தனை (Strategic thinking), பகுப்பாய்வு திறன் மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்க்கிறது.பதட்டம் மற்றும் மனச்சோர்வைக் குறைத்து, தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது.கடினமான சூழ்நிலைகளில் முடிவெடுக்கும் திறன் மற்றும் குழு ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது. முக்கியமாக உடல் வலிமை, மூச்சுக் கட்டுப்பாடு, மற்றும் தந்திர சிந்தனையை வளர்க்கிறது. நடைப்பயிற்சி உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. விளையாட்டு என்பது உடலை அழகாக்குவதுடன், மன அழுத்தத்தைக் குறைத்து, ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கிறது.
2, காவல் நிலையத்தில் வளாகத் தூய்மையும், வேம்பு அரச மரங்களின் அழகியலும் – குற்ற மனங்களைக் கூட நிதானம் அடைய செய்யும், இச் சிறப்பம்சத்தை காவல் நிலைய வளாகத்தில் செதுக்கி கொடுத்துள்ளார் – திருக்குறள் கூறும் கோமகன் அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் திரு சங்கர் அவர்கள்,
வரவேற்போம்,,,,, கற்போம்! கற்பிப்போம்!! மானுடம் மாண்படைய
வாழ்த்துக்களுடன்- ஹலோ இந்தியா தமிழ் நியூஸ் இணையதளம்


