சினிமா

பாடல்களை முதலில் கெடுத்த பெருமை அனிருத்துக்குதான் போய் சேரும். ஒரு பாட்டுக்கு முகவரியே மொழிதானே!ரூ.10 கோடிக்கு உச்சம் தொட்டு.. அனிருத்தை “சாய்க்க” வந்த சாய் அபயங்கர்.. தாவ ரெடியாகும் பிரபலங்கள்?

பாடல்களை முதலில் கெடுத்த பெருமை அனிருத்துக்குதான் போய் சேரும். ஒரு பாட்டுக்கு முகவரியே மொழிதானே!ரூ.10 கோடிக்கு உச்சம் தொட்டு.. அனிருத்தை "சாய்க்க" வந்த சாய் அபயங்கர்.. தாவ ரெடியாகும் பிரபலங்கள்?

பாடல்களை முதலில் கெடுத்த பெருமை அனிருத்துக்குதான் போய் சேரும். ஒரு பாட்டுக்கு முகவரியே மொழிதானே!ரூ.10 கோடிக்கு உச்சம் தொட்டு.. அனிருத்தை “சாய்க்க” வந்த சாய் அபயங்கர்.. தாவ ரெடியாகும் பிரபலங்கள்?

சென்னை- ஜூலை 15/ 2025 பிரபல பாடகர் திப்பு மற்றும் ஹரிணியின் மகன் சாய் அபயங்கர் என்ற 20 வயது இளைஞர்தான், அனிருத்துக்கு போட்டியாக கருதப்பட்டு வருகிறார்

தற்போது கோலிவுட் முழுக்க இதே பேச்சாக உள்ளது.. அனிருத்தைவிட அதிக வாய்ப்புகளை தற்போது சாய் பெற்றுள்ளாராம். இந்நிலையில், எழுத்தாளர் ராஜ கம்பீரன், அனிருத் இசை குறித்து கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இசையமைப்பாளர் அனிருத் தற்போது ‘கூலி, ஜனநாயகன், மதராஸி, லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி, ஜெயிலர் 2’ உள்ளிட்ட படங்களுக்கும், தெலுங்கில் ‘கிங்டம், மாஜிக், த பாரடைஸ்’ ஆகிய படங்களுக்கும், ஹிந்தியில் ‘கிங்’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இவரது படங்களுக்கான இசை உரிமையை இசை நிறுவனங்கள் போட்டி போட்டு வாங்குகின்றன. இதனால் பணமழை கொட்டி வருகிறது.. எனவேதான், ஏற்கனவே 10 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கி வரும்நிலையில், புதிதாக ஒப்பந்தமாக உள்ள படங்களுக்கு அனிருத் சம்பளத்தை உயர்த்தி கேட்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

வரிசையாக 10 படங்கள்

ஆனால், தமிழில் இன்னும் ஒரு படம் கூட வெளியாகாத சாய் அபயங்கர் 10 படங்கள் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அனிருத்தின் சில ஆஸ்தான இயக்குனர்களே, சாய் பக்கம் தாவ உள்ள உள்ள நிலையில், அனிருத் எதை பற்றியும் கவலைப்படாமல், தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியதாக கூறுகிறார்கள்.

அதிக சம்பளத்தை அனிருத் கேட்பதாலும், ஏற்கனவே அனிருத் மீதான வெறுப்பு காரணத்தினாலும்தான், பலரும் சாயை நாடி சென்று கொண்டிருக்கிறார்களாம்.

ரஜினியின் உறவினர்

இந்நிலையில், Aagayam Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள எழுத்தாளர் ராஜ கம்பீரன், “அனிருத் மெலடியும் நன்றாக செய்யக்கூடியவர்தான்.. அத்துடன் அவருடைய இசையில் ஒரு புத்துணர்ச்சி இருப்பதை மறுக்க முடியாது. அதுக்காக ரஜினியின் உறவினர் என்பதாலேயே நீண்டகாலம் இங்கே காலம் தள்ள முடியாது..எனவே தனித்தன்மையுடன்தான் அனிருத் பயணித்து வருகிறார்.

ஆனால், பாடல் வரிகள் மீது அனிருத் கவனம் செலுத்தும்போதுதான், அது அனிருத்துக்கு மைனஸாகிறது.. பாடல் வரிகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமல், மொழிக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமல், பாடல்களை முதலில் கெடுத்த பெருமை அனிருத்துக்குதான் போய் சேரும். ஒரு பாட்டுக்கு முகவரியே மொழிதானே?

மொழி முக்கியம்

பொதுவாக, உனக்கு பிடிச்ச பாட்டு ஒன்று சொல் என்றால், பாடல் வரிகளைதானே சொல்ல வேண்டியிருக்கிறது? எனவே, பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய இசையமைப்பாளராக அனிருத் இல்லை.. இப்போது அனிருத் வழியிலேயே இன்னொருத்தர் வரத்துவங்கியிருக்கிறார்..

அனிருத்தை ஓரங்கட்ட வந்த சாய் என்கிறார்கள்.. அனிருத் தமிழைத்தான் அழித்தார்.. இசையில் தமிழ்ப்படுகொலை செய்தவர்.. காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை தர வேண்டும் என்பதற்காகவே இதையெல்லாம் சொல்கிறேன்..

மாறுவதுதான் காலம்

எனினும், சினிமா துறையை பொறுத்தவரை, ஒரே இசையமைப்பாளர்கள், நடிகர்கள் முன்னணியிலேயே பயணிக்க முடியாது.. காலகட்டத்துக்கு காலகட்டம் மாறுபடும்.. இதில் கமல், ரஜினி போன்றோர் விதிவிலக்கு..

தற்போது புதிய இசையமைப்பாளர்கள் என்பது குறைவு.. அப்படி வருபவர்கள் நிலைத்திருப்பது அதைவிட குறைவு..

இளையராஜா மாதிரியே இசையமைப்பவர்கள் எல்லாம் இளையராஜா ஆகிவிட முடியாது.. முதல்ல இசையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்தான் இங்கே நிலையாக பேசப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button