குற்றம்

குமுதா சென்னை பூந்தமல்லி வீட்டில் சேலையால் வாழ்க்கையை முடித்துக் கொண்ட நிலையில், அவரது ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை அழுதபடியே இருந்தது. பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது 

குமுதா சென்னை பூந்தமல்லி வீட்டில் சேலையால் வாழ்க்கையை முடித்துக் கொண்ட நிலையில், அவரது ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை அழுதபடியே இருந்தது. பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது 

குமுதா சென்னை பூந்தமல்லி வீட்டில் சேலையால் வாழ்க்கையை முடித்துக் கொண்ட நிலையில், அவரது ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை அழுதபடியே இருந்தது. பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது 

ஜூலை 14 /2025 சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த குமுதா என்ற பெண் பெங்களூருவை சேர்ந்த அஜித்குமார் என்பவரை வேலை செய்யும் போது காதலித்து திருமணம் செய்தார்.

இவர்களுக்கு ஒன்றரை வயது ஒரு குழந்தை உள்ளது. காட்டுப்பாக்கத்தில் குழந்தை மற்றும் கணவருடன் வசித்தார் குமுதா. கணவர் அஜித்குமார் பெங்களூரில் வேலை செய்து வருவதால் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்நிலையில் குமுதாவிடம் இருந்த செல்போன் அழைப்பு பெற்றோரை ஆடிப்போக வைத்துள்ளார்.

காதல் திருமணம் செய்யும் பெண்கள், திருமணமான சில மாதங்களில் அல்லது ஒரு சில ஆண்டுகளிலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் தவறான முடிவெடுக்கிறார்கள். சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு எதிர்கொள்ள தெரியாமல் தவறுகளை செய்கிறார்கள். அவமானங்கள், வலிகள், பிரச்சனைகள், கடினமான சூழல்களை போன்றவற்றை எதிர்கொள்ள சமூகம் அவர்களுக்கு கற்றுக்கொடுத்ததா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

2கே கிட்ஸ்

இதனால் 2கே கிட்ஸ் பலர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் சந்தோஷங்களை மட்டுமே அனுபவிக்க பிறந்தவர்களாக பெற்றோர்கள் வளர்த்ததும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் என்ன தான் தைரியசாலிகளாக வளர்ந்தாலும், அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் சம்பவங்களும் நடக்கிறது. சென்னை புறநகர் பகுதியான பூந்தமல்லி பகுதியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

காதல் திருமணம்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த 48 வயதாகும் தேவராஜ் என்பவர், தனது மனைவி கற்பகத்துடன் வசித்து வருகிறார். இவர்களது மகள் குமுதாவுக்கு 27 வயது ஆகிறது. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த போது உடன் வேலை செய்த பெங்களூருவை சேர்ந்த 30 வயதாகும் அஜித்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களை பெற்றோர் ஏற்றுக் கொண்டார்கள். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. குமுதா தனது கணவர் அஜித்குமாருடன் காட்டுப்பாக்கம் விஜயலட்சுமி நகர் பகுதியில் தனிக்குடித்தனமாக வசித்து வந்தார். வேலை காரணமாக அஜித்குமார் பெங்களூர் சென்று விட்டார். வீட்டில் குமுதா குழந்தையுடன் தனியாக இருந்தார்.

கன்னியாகுமரி பிளஸ் 2 மாணவிக்கு கொட்டிய பல லட்சங்கள்.. தாயின்’காதல்’ ஐடியா.. கடைசியில் ட்விஸ்ட்

செல்போனில் கடைசி பேச்சு

அப்போது செல்போனில் தனது பெற்றோரை தொடர்பு கொண்ட குமுதா, தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், அதனால் வாழ்க்கையை முடித்துக் கொள்ளதவாக கூறி அழுது புலம்பியதாக கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன அவரது பெற்றோர் உடனடியாக குமுதா வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குமுதா வீட்டில் சேலையால் வாழ்க்கையை முடித்துக் கொண்ட நிலையில், அவரது ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை அழுதபடியே இருந்தது.

சந்தேகம்

இது குறித்து உடனே பெற்றோர் பூந்தமல்லி போலீசுக்கு தகவல் தந்தனர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இறந்து போன குமுதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி குமுதாவின் பெற்றோர் புகார் அளித்தனர்.

பெற்றோர் புகார்

இது தொடர்பாக அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது. தனது மகளுக்கு திருமணம் ஆன நாள் முதல் அஜித்குமார் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், இதனால் ஏற்கனவே ஒருமுறை குமுதா வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஓ.விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா என்ற புதுப்பெண் வாழ்க்கையை முடித்துகொண்டார். அதேபோல் அடுத்தடுத்து சம்பவங்கள் நடந்த வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தயவு செய்து இதுபோல் தவறான முடிவெடுக்க வேண்டாம். வாழ்க்கையில் தவறுகள் நடப்பது இயல்பு. அதற்காக முடித்துக்கொள்ள நினைப்பது முட்டாள்தனம் ஆகும்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 2464 0050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணி நேரம்)

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button