தமிழக அரசின் ஆன்மீக சேவை -குருஸ்தலமான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் -இரண்டாம் படை வீட்டில் மேளதாளங்கள் முழங்க 37 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலின் மேற்கு வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக கடம் புறப்பாடு
தமிழக அரசின் ஆன்மீக சேவை -குருஸ்தலமான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் -இரண்டாம் படை வீட்டில் மேளதாளங்கள் முழங்க 37 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலின் மேற்கு வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக கடம் புறப்பாடு
தமிழக அரசின் ஆன்மீக சேவை – குரு ஸ்தலமான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் – இரண்டாம் படை வீட்டில் மேளதாளங்கள் முழங்க 37 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலின் மேற்கு வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக கடம் புறப்பாடு
07/07/2025திருச்செந்தூர்தமிழ் கடவுள் என்று கொண்டாடப்படும் முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான, தூத்துக்குடி மாவட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம், 15 ஆண்டுகளுக்கு பிறகு, ஆகமப்படி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவுக்கினங்க, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் முன்னின்று நடத்தினார்கடந்த 2009ம் ஆண்டுக்கு பின்னர் இன்று மீண்டும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது.சுமார் 3000 ஆண்டுகள் பழமையான கோயிலாக கருதப்படும் இது, முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இருக்கிறது. மற்ற 5 வீடுகளும் மலைப்பகுதிகளில் அமைந்திருக்க, இது ஒன்று மட்டுமே கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கிறது. அந்த வகையில் மிகவும் பிரசித்தி பெற்றதாக இக்கோயில் இருக்கிறது.திருக்கோயில்களில் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
ஆனால் திருச்செந்தூர் கோயிலுக்கு 12 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்தது. இதனையடுத்து, கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்குக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்படும் என அறிவித்தார். இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டது.அதேபோல மறுபுறம், எச்.சி.எல் நிறுவனத்தின் சார்பில் 206 கோடி ரூபாய் சிவ் நாடார் அவரின் தாயார் பெயரில் வாமா சுந்தரி அறக்கட்டளை மூலம் பணம் கொடுத்துள்ளார். அதில், ராஜகோபுரம், அர்த்தமண்டபம், அன்னதான கூடம், முகப்பு மண்டபம், பாதசாரி நடை மாறாமல் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான மொத்த செலவில் 60 சதவீதம் சிவ் நாடார் கொடுத்துள்ளார்.இதனையடுத்து கோயிலை புதுப்பிக்கும் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்றன. முதற்கட்டமாக கோயில் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு, சிற்பங்கள் புதுப்பிக்கப்பட்டன. ராஜ கோபுரத்தின் கீழ் தளம், தூண்கள், 9 கோபுர கலசங்களை புதுப்பித்தல், கலசங்களில் மீண்டும் தானியங்களை நிரப்புதல் ஆகிய பணிகள் நடைபெற்றன.இதில் சவாலான பணி என்னவெனில் 9 கோபுர கலசங்களையும் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும். இதற்காக சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு, பின்னர் கோபுர கலசங்கள் பத்திரமாக கீழே இறக்கி கொண்டுவரப்பட்டு புதுப்பிக்கப்பட்டன. மேலும் வள்ளி குகை, பஞ்சலிங்கம், நாழி கிணறு உள்ளிட்டவையும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.இதனை தொடர்ந்து, குடமுழுக்கு பணிகள் தீவிரமடைந்தன. இது குறித்த பேட்டியளித்திருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கை ஒட்டி 3 ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுக ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு ஒரு மைல்கல்” என்று கூறியிருந்தார்.கடந்த 28ம் தேதி சேகர்பாபு மற்றும் கனிமொழி எம்பி கோயிலில் குடமுழுக்கு பணிகளை நேரில் ஆய்வு செய்தனர். குடமுழுக்குக்கு வரும் தனியார் வாகனங்கள் நிறுத்த சிறப்பு ஏற்பாடு, கூடுதல் அரசு பேருந்துகளை நிறுத்துவதற்கு இடங்கள், கோயில் சார்பில் அன்னதான ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்தும், பாதுகாப்பு பணிகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்திருந்தார்.கும்பாபிஷேக யாக சாலை மற்றும் அதன் பாதுகாப்பு பணிகள், கோயில் சார்பில் கட்டப்பட்ட 52 அறைகளின் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது “பக்தர்களுக்கு தேவையான தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள், கோயில் உபயதாரர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னதானம் வழங்கும் இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. கழிப்பிடம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு, மருத்துவ வசதிகள் குறித்தும், ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டவை குறித்தும் அனைத்து துறை அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கான 90 சதவிகிதத்திற்கும் மேலான பணிகள் நிறைவடைந்துள்ளன” என்று கூறியிருந்தார்.
நிதி ஒதுக்கியது தொடங்கி, இன்று குடமுழுக்கு நடந்தது வரை அமைச்சர் சேகர்பாபு உடன் நின்று அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்து வந்திருக்கிறார். இறுதியாக இன்று அவர் முன்னிலையில் கோயில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றிருக்கிறது.கோயில் சிற்பங்கள் சிறப்பாக புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. பக்தர்களின் தங்கும் வசதிக்காக, தற்காலிக ஓய்வறை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இன்று நடந்த குடமுழுக்கில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்றிருந்தனர். ஆனாலும் எந்த பிரச்சனையும் இன்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டிருக்கிறது.கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி காலை, மாலை வேளைகளில் யாகசாலை பூஜைகள் நடந்து வந்து. யாக சாலை வழிபாட்டில், வேத பாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாகசுர இன்னிசையும், பெண் ஓதுவார்கள் உள்பட 108 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெற்றது.இவ்விழாவிற்காக மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும், திருக்கோயில் குடமுழுக்கை அனைத்து பகுதிகளிலும் காணும் வகையில் எல்இடி அகன்ற திரைகள் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.பாதுகாப்பு பணியில் 6,000 காவலர்கள், 25 மருத்துவக் குழுக்களும், 27 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. சாதாரணமாக திருக்கோயில்களில் மருந்து சாத்திய பிறகுதான் குடமுழுக்கு நடைபெறும். திருச்செந்தூர் திருக்கோயிலில் குடமுழுக்கு நடந்த பின்னரே மருந்து சாத்தும் நிகழ்வு நடைபெறுவது மரபாக உள்ளது. குடமுழுக்கை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது.07.07.2025 தொடங்கி 05.08.2025 வரை 30 நாட்கள் மண்டல பூஜையோடு திருக்கோயில் ஆவணித் திருவிழாவும் தொடங்குகின்றது. ஆகவே திருச்செந்தூர் திருக்கோயிலுக்கு இந்த நாட்களில் பக்தர்கள் எப்போது வந்து தரிசனம் செய்தாலும் குடமுழுக்கில் கலந்து கொள்ளுகின்ற புண்ணியம் கிடைக்கும். குடமுழுக்கை காண்பதற்காக பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். திரும்பும் திசையெங்கும் முருக பக்தர்களும், அரோகரா கோஷமும் விண்ணை முட்டுகிறது.இத்திருகோயில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வரும் நிலையில் இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் மேற்கொள்வார்கள்.கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்,தலையா கடல் அலையா ? என்ற கேள்விக்கேற்ப பலரும் திருச்செந்தூர் படையெடுத்து வருகின்றனர். இத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் குடமுழுக்கு நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடந்த 2009 ஆம் ஆண்டிற்கு பிறகு நாளைய தினம் குடமுழுக்கு விழா மிக பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் குடமுழுக்கு விழா என்பதால் பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்தும் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ராஜகோபுரம் அருகே 8000 சதுர அடியில் பிரம்மாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டு, 76 குண்டங்களில் யாகசாலை பூஜைகள் நடந்து காலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான குடமுழுக்கு விழா காலை 5 மணிக்கு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்று, 6:15 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பக்தர்கள் குடமுழுக்கு விழாவை நேரடியாக காண்பதற்காக கடற்கரை பகுதியில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்ந்து குடமுழுக்கு விழாவை நேரடியாக காண்பதற்கு ஏதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் 65 இடங்களில் எல்இடி திரைகள் மூலம் பக்தர்கள் காணுவதற்கு ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டது.நெற்றியில் திலகமிட்டு.. மெய் மறந்த சேகர் பாபு! அரோகரா முழக்கத்தால் ஆச்சரியம்! நெகிழ்ந்த அர்ச்சகர்கள்இதில் பங்கேற்றிருந்த அமைச்சர் சேகர் பாபு, கோயில் விமான தளத்தில் கலச கோபுரத்திற்கு அருகில் நின்று நெற்றியில் திலகமிட்டு வழிப்பட்டார்.”அறிவே வடிவான கந்தப் பெருமானே! என் அஞ்ஞானத்தை போக்கி, ஞான ஒளியை அருளுவாய்” எனும் கிருபானந்த வாரியாரின் பாடலுக்கு வடிவம் கொடுத்தற்போல, லட்சக்கணக்கான பக்தர்கள் முருக பெருமானை வேண்டி, சுப்பிரமணிய திருக்கோயிலின் முன்பு திரண்டிருந்தனர்.அதிகாலை 6.15 மணிக்கு, சூரிய உதய நேரத்தில் மக்களின் அரோகரா முழக்கத்திற்கு நடுவே, புனித நீர் கலசத்தில் ஊற்றி கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. லட்சக்கணக்கானோர் விண்ணதிர முழங்கிய அரோகரா கோஷம், பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.கோயிலின் விமான தளத்தில், கலச கோபுரத்திற்கு அருகில் இருந்த சேகர் பாபு ஒரு கணம் கண்களை மூடி, இறைவனை வேண்டிக் கொண்டார். கண்களை திறந்தபோது பொழுது முழுவதுமாக புலர்ந்திருந்தது. சூரியனின் கதிர் பட்டு கலக கோபுரம் பொன்னென மின்ன, விபூதியை எடுத்து நெற்றியில் திலகிமிட்டுக்கொண்டார். கலசத்தின் மீது ஊற்றப்பட்ட புனித நீர் சேகர் பாபு மீதும் தூவப்பட, ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் அனைவர் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.செழுமையும், பசுமையையும் பிரதிபலிக்கும் நிறமான பச்சை நிறத்தில் அங்கவஸ்திரம் அணிந்து நின்ற சேகபர் பாபுவுக்கு அர்ச்சகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 16 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டதன் மூலம், திமுக அரசு பக்தர்களுக்கான அரசாகவும் சாட்சியளிப்பதாக அர்ச்சகர்கள் பெருமிதம் தெரிவிதிருக்கின்றனர்.கோபுர கலசங்கள் மீது சாற்றுவதற்கு என சேகர் பாபு உலர் பழங்கள் கொண்ட மாலையை எடுத்து வந்திருந்தார். கோயில் குடமுழுக்குக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கியதை தொடர்ந்து, கோயிலின் புனரமைப்பு பணிகளை மேற்பார்வையிடுவது, பக்தர்களின் நலன்களை மனதில் கொண்டு வசதிகளை ஏற்படுத்தி தருவது, மேலும் தேவையான நிதி ஆதாரத்தை உருவாக்குவது என சேகர் பாபு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நின்று வெற்றிகரமாக கோயில் குடமுழுக்கை நடத்தி கொடுத்திருக்கிறார்.
அமைச்சரின் பணிகளுக்கும், இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளுக்கும் பக்தர்களும், அர்ச்சகர்களும் நன்றியும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



