Uncategorized

பயணத்தில்  பாஜகவிற்கு ஏற்ற பல கருத்துக்களை கூறி வரும் எடப்பாடி பழனிச்சாமி

பயணத்தில்  பாஜகவிற்கு ஏற்ற பல கருத்துக்களை கூறி வரும் எடப்பாடி பழனிச்சாமி

பயணத்தில்  பாஜகவிற்கு ஏற்ற பல கருத்துக்களை கூறி வரும் எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடிக்கு சாதகமாக மாறிய எழுச்சி பயணம்.. உற்றுப்பார்த்த டெல்லி.. அமித் ஷாவே வராராமே என தொடரும் கிசு கிசு,,,

சென்னை ஜூலை 9/2025
தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுச்சிப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

மேற்கு மண்டலத்தில் இருந்து இந்த பயணம் தொடங்கி உள்ளது. இதில் விரைவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த பயணம் கிட்டத்தட்ட அதிமுக + பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் பயணமாக அமைந்துவிட்டது. இரண்டு கட்சிகளும் நெருக்கமாகும் அளவிற்கு பயணத்தில் பல முக்கியமான சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன. முன்னதாக பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எனது அருமை நண்பர் எடப்பாடி பழனிசாமி , மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் தொடங்கிய “புரட்சித்தமிழரின் எழுச்சிப்பயணத்தில்”இன்று மேட்டுப்பாளையத்தில் கலந்துகொண்டேன்.

பெருந்திரளாக கூடியிருந்த பொதுமக்கள் திமுக அரசுக்கு முடிவுரை எழுதத் தயாராகி விட்டார்கள் என்பதை உணர்த்துவதாக அமைந்திருந்தது. இந்த நிகழ்வில் என்னுடன்,மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தேசிய இணை பொறுப்பாளர் ரெட்டி சுதாகர்,கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ திருமதி. வானதி சீனிவாசன் ,பாஜக மாநில பொதுச்செயலாளர் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் காரியகர்த்தாக்கள் இணைந்து கலந்துகொண்டார்கள்.

தமிழக மக்களின் நலனுக்காக எடப்பாடி பழனிச்சாமி தொடங்கியுள்ள இந்த புரட்சிப்பயணம் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துகள், என்று கூறி உள்ளார்.

இந்த மாநாடு குறித்து மத்திய இணை அமைச்சர் எல் முருகன், சட்டம்-ஒழுங்கு முதல் சாமானிய மக்களுக்கான சமூகநீதி வரை, அனைத்துமே இந்த போலி திராவிட மாடல் ஆட்சியில் தமிழக மக்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்துள்ளது. விடியல் தருவதாய் வார்த்தைகளையும், சாத்தியமற்ற வாக்குறுதிகளையும் அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்தவர்களால் தமிழக மக்களுக்கு இதுவரை எந்தவொரு நன்மையும் நிகழவில்லை. தற்போது, இந்த போலி திராவிட மாடல் ஆட்சிக்கு முடிவுரை எழுத தமிழக மக்கள் தயாராகிவிட்டனர். 2026-ஆம் ஆண்டில், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி நிச்சயம் மலரும், என்று கூறி உள்ளார்.

பாஜகவிற்கு ஏற்ற கருத்துக்கள்

இந்த பயணத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் பாஜகவிற்கு ஏற்ற பல கருத்துக்களை கூறி வருகிறார். மக்கள் கோயில்களின் உண்டியலில் பணம் செலுத்துவது, கோயிலை மேம்படுத்தவே. ஆனால், திமுக அரசு அனைத்து கல்லூரிகளையும் அரசுப் பணத்தில் கட்டாமல், அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் இது ஒரு சதிச்செயல் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மக்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள்.

கல்விக்கு செலவு செய்ய வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால், அதை அரசுப் பணத்தில் செய்ய வேண்டும். கோயில் பணத்தை கல்விக்காக செலவு செய்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.

அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் தற்போது பணம் இருப்பது திமுகவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், அது அவர்களின் கண்களை உறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களுக்கு கோயில்கள் மீது விருப்பம் இல்லாத காரணத்தால், கோயில் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டப்படுகிறது., என்று எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட பாஜகவின் குரலில் பேசி உள்ளார்.

எடப்பாடி அமித் ஷா வருகை

இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பயணத்தில் அமித் ஷா கலந்து கொள்கிறாராம். உள்துறை அமைச்சர் அமித் ஷா அடுத்த மாதம் அல்லது இந்த மாதம் இறுதியில் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பயணத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி பயணம் கவனம் பெற்றுள்ள நிலையில் கூட்டணிக்கும் இது சாதகமாக மாற தொடங்கி உள்ளது. இந்த நிலையில்தான் எடப்பாடி உடன் இந்த பயணத்தில் அமித் ஷாவும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button