அரசியல்

விஜய் யாத்திரை,,,,,.          தவெக தலைவர் விஜய் செப்டம்பர் மாதத்தில் சுற்றுப்பயணம்?

விஜய் யாத்திரை,,,,,.          தவெக தலைவர் விஜய் செப்டம்பர் மாதத்தில் சுற்றுப்பயணம்?

விஜய் யாத்திரை,,,,,.          தவெக தலைவர் விஜய் செப்டம்பர் மாதத்தில் சுற்றுப்பயணம்?

சென்னை/ ஜூலை 12.2025 களமிறக்கப்பட்ட பெரிய டீம்.. விஜய் எதுக்கோ பெருசா பிளான் பண்ணுறாரு போல.. இந்த ரீல்ஸை பாருங்க

சென்னையில் தொடங்கப்பட்டு உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய ஐடி விங் அலுவலகம் தொடர்பான ரீல்ஸ் வெளியாகி உள்ளது.

இது தேர்தல் வரை தமிழக வெற்றிக் கழகத்திற்கான வார் ரூம் போல செயல்பட உள்ளது.

இதில் விஜய் முதல்வராக போகும் தேதி என்று குறிப்பிட்டு உத்தேச கவுண்டிங் ஓடிக்கொண்டு இருக்கிறது. tvk_cardiffsaravanan என்ற இன்ஸ்டாகிராம் ஐடி இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி இருக்கும் நடிகர் விஜய், மிகப்பெரிய ஐடி விங் அலுவலகத்தைத் திறந்துள்ளார். இதற்காகச் சென்னை தேனாம்பேட்டையில் பிரம்மாண்டமான அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

நடைபயணம் மற்றும் தேர்தல் பணிகளைக் கவனிக்கும் விதமாக மிகப்பெரிய ஐடி விங் அலுவலகத்தைத் திறக்க விஜய் முடிவு செய்துள்ளார். தேனாம்பேட்டையில் அலுவலகம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே அலங்காரப் பணிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

விஜய் பிளான்

ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பாணியில் விஜய் நடைபயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 2009ஆம் ஆண்டில், தந்தையின் மரணத்திற்குப் பின் ஜெகன் மோகன் ரெட்டி அரசியல் பாதாளத்தில் இருந்தார். அதன்பின் அவர் நடத்திய யாத்திரை, அரசியல் செயல்பாடுகள் அவரின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தன. களப்பணிகளைச் செய்தது, மக்களிடம் தொடர்ந்து நெருக்கமாக இருக்கும் வகையில் முடிவுகளை எடுத்தது, திட்டமிட்டு ஒவ்வொரு நகர்வையும் மேற்கொண்டது என்று ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.

அவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது ஜெகன் மோகனின் பாதயாத்திரைதான். அதைச் செய்யக் காரணம் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம்தான். அந்த நிறுவனத்தில் அப்போது திட்டங்களை வகுத்தது ஜான் ஆரோக்கியசாமிதான். இப்போது விஜய்க்குப் பின்னணியில் இருக்கும் நபரும் ஜான் ஆரோக்கியசாமி என்ற மாஸ்டர்மைண்ட்தான். தமிழக அரசியலில் மீண்டும் நீண்ட நாட்களுக்குப் பின் ஆக்டிவ் ஆகி இருக்கும் அரசியல் ஆலோசகர்தான் ஜான் ஆரோக்கியசாமி. திருச்சியைச் சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி ஏற்கனவே பாமகவிற்குத் தேர்தல் பணிகளைச் செய்துள்ளார்.

விஜய் யாத்திரை

தற்போது விஜய்க்கு இவர்தான் தேர்தல் பணிகளைச் செய்கிறார். இதனால் ஜெகன் மோகனைப் போலவே நடிகர் விஜய் தமிழ்நாட்டில் நடைபயணம் தொடங்க வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் விஜய் நடைபயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜயின் பேச்சு, அவரின் வெள்ளை சட்டை, பிரவுன் பேண்ட் ஆகியவற்றை பார்த்தவர்களுக்கு இது எங்கேயோ பார்த்த ஸ்டைல் போல இருக்கிறதே என்று தோன்றலாம். அது வேறு யாருமல்ல, ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஸ்டைலைத்தான் விஜய் பின்பற்றுகிறார் என்ற வாதம் வைக்கப்பட்டு வருகிறது.

அவரைப் போலவே அடுத்த வருடம் விஜய் நடைபயணம் மேற்கொள்ளப் போவதாகத் தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டில் விஜய் பிரபலமாகி இருந்தாலும் விஜய் கட்சி பிரபலம் இல்லை. விஜய் கட்சிக்கு என்று வார்டு ரீதியாக நிர்வாகிகள் இல்லை.

இதையெல்லாம் உருவாக்கப் பல வருடங்கள் ஆகும். ஆனால் அதற்கு ஒரு ஷார்ட் கட் உள்ளது. அது நடைபயணம். இதற்காக நடைப்பயணத்தை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் மாநாடு நடத்தவும், செப்டம்பர் முதல் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விக்கிரவாண்டி மாநாட்டைப் போல் பிரம்மாண்டமாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ளும் வகையில் மாநாடு நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் செப்டம்பர் மாதத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதனைத் தஞ்சாவூரில் இருந்து தொடங்க இருப்பது உறுதியாகியுள்ளது. டெல்டா பகுதியில் இளைஞர்கள் மற்றும் மகளிர் மத்தியில் தவெகவுக்கு மிகப்பெரிய ஆதரவு இருப்பதால், விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கான தொடக்கமாகவும் இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், செப்டம்பர் மாதம் பெரியாரின் பிறந்தநாளான 17ஆம் தேதியன்று விஜய் சுற்றுப்பயணத்தைத் தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தவெகவின் கொள்கைத் தலைவர்களில் பெரியாரும் ஒருவர். இதனால் கொள்கைத் தலைவரின் பிறந்தநாளன்று சுற்றுப்பயணத்தைத் தொடங்க விஜய் முடிவெடுத்துள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button