தோழர் யுகபாரதி அவர்களின்” மஹா பிடாரி” நூற்று இருபது காதல் கவிதைகள்
தோழர் யுகபாரதி அவர்களின்" மஹா பிடாரி" நூற்று இருபது காதல் கவிதைகள்

தோழர் யுகபாரதி அவர்களின்” மஹா பிடாரி” நூற்று இருபது காதல் கவிதைகள்
po
நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கான மாணவர்கள் மத்தியில் முழு நாள் அறிமுக உரையாடல் நிகழ்வாக அமைந்திருந்தது.
தோழர் யுக பாரதி அன்பின் அழைப்பாக அழைத்து நூல் குறித்து பேசக் கூறினார்.
முதல் கவிதை:
வறுத்தெடுக்கும்
உன் நினைவுகளில்
வாழ்ந்து முடித்த களைப்பே
வந்து விட்டதெனக்கு
என்றாலும் உன் காதல்
விடுவதாயில்லை
மூர்க்க முத்தங்களில்
மூட்டிவிடுகிறது தீயை
அடாவடி அணைப்புகளில்
ஆட்டுவிக்கிறது
ஆனந்தப் பேயை
உண்மையில் உன் அன்பின்
அட்டூழியங்களே உணர்த்திற்று
நீ மனுஷக் குமாரியல்லள்
மஹா பிடாரி.
“மஹா பிடாரி” கவிதைகள் வாசிப்பு
வாழ்வின் மென்மையை, மனிதத்தின் நேசிப்பை, தீராத காதலை நினைவுகளின் தாழ்வாரத்திலிருந்து மீட்டெடுக்கிறது.
எல்லாவிதமான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கச் சொல்கிறது.
“தன்னை மறந்த லயந் தன்னில்” மிதக்க வைத்துள்ளது.
நன்றி தோழர் யுகபாரதி
