political

குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் எடப்பாடியை கெடுக்கும்- வலி நிற்பதற்காக ஏழை, எளிய மக்கள் குடிக்கிறார்கள்.. எடப்பாடி பழனிசாமியின் பொறுப்பற்ற பேச்சு..

குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் எடப்பாடியை கெடுக்கும்- வலி நிற்பதற்காக ஏழை, எளிய மக்கள் குடிக்கிறார்கள்.. எடப்பாடி பழனிசாமியின் பொறுப்பற்ற பேச்சு..

குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் எடப்பாடியை கெடுக்கும்- வலி நிற்பதற்காக ஏழை, எளிய மக்கள் குடிக்கிறார்கள்.. எடப்பாடி பழனிசாமியின் பொறுப்பற்ற பேச்சு..

சென்னை: ஜூலை 11/2025
வலி நிற்பதற்காக ஏழை, எளிய மக்கள் குடிக்கிறார்கள் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுச்சிப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். மேற்கு மண்டலத்தில் இருந்து இந்த பயணம் தொடங்கி உள்ளது.

இந்த பயணம் கிட்டத்தட்ட அதிமுக + பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் பயணமாக அமைந்துவிட்டது. இரண்டு கட்சிகளும் நெருக்கமாகும் அளவிற்கு பயணத்தில் பல முக்கியமான சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன. முன்னதாக பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எனது அருமை நண்பர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் தொடங்கிய “புரட்சித்தமிழரின் எழுச்சிப்பயணத்தில்” மேட்டுப்பாளையத்தில் கலந்துகொண்டேன்.

பெருந்திரளாக கூடியிருந்த பொதுமக்கள் திமுக அரசுக்கு முடிவுரை எழுதத் தயாராகி விட்டார்கள் என்பதை உணர்த்துவதாக அமைந்திருந்தது. இந்த நிகழ்வில் என்னுடன், மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தேசிய இணை பொறுப்பாளர் ரெட்டி சுதாகர், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ திருமதி. வானதி சீனிவாசன், பாஜக மாநில பொதுச்செயலாளர் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் காரியகர்த்தாக்கள் இணைந்து கலந்துகொண்டார்கள். தமிழக மக்களின் நலனுக்காக எடப்பாடி பழனிச்சாமி தொடங்கியுள்ள இந்த புரட்சிப்பயணம் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள், என்று கூறி உள்ளார்.

எடப்பாடி பேச்சு

இந்த பயணத்தில் எடப்பாடி பேசும் சில விஷயங்கள் சர்ச்சையாகி வருகின்றன. ஏற்கனவே அவர் கோவில் நிதி குறித்து பேசியது சர்ச்சையானது. இந்த நிலையில் நேற்று எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ஏங்க ஏழை.. எளியோர்.. கஷ்டப்பட்டு.. கடுமையாக உழைத்து.. காலையில் இருந்து மாலை வரை உழைத்த பின்.. இந்த கடையில் போய் வாங்கி குடிக்கிறார்கள். கொஞ்ச காசில் உடம்பு வலியை போக்குவதற்கு இப்படி குடிக்கிறார்கள். அதில் கூட 10 ரூபாய்க்கு கொள்ளையடிக்கிறார்கள்., என்று கூறி உள்ளார்.

மக்களின் குடி பழக்கத்தை வலிக்காக குடிக்கிறார்கள் என்று பொதுமைப்படுத்தி அவர் பேசியது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

எடப்பாடி கோவில் நிதி பேச்சு

முன்னதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சில், கோவிலை பார்த்தாலே திமுகவிற்கு கண்ணு உறுத்தது. அதை பற்றி நான் சொல்ல கூடாது. சொன்னால் வேறு மாதிரி ஆகிவிடும். நீங்களே புரிந்து கொள்ளுங்கள். கோவிலில் மக்கள் பணம் போடுகிறார்கள். கோவிலை விரிவுபடுத்த பணம் போடுகிறார்கள். மக்கள் கோயில்களின் உண்டியலில் பணம் செலுத்துவது, கோயிலை மேம்படுத்தவே. ஆனால், திமுக அரசு அனைத்து கல்லூரிகளையும் அரசுப் பணத்தில் கட்டாமல், அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் இது ஒரு சதிச்செயல் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மக்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள்.

கல்விக்கு செலவு செய்ய வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால், அதை அரசுப் பணத்தில் செய்ய வேண்டும். கோயில் பணத்தை கல்விக்காக செலவு செய்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் தற்போது பணம் இருப்பது திமுகவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், அது அவர்களின் கண்களை உறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களுக்கு கோயில்கள் மீது விருப்பம் இல்லாத காரணத்தால், கோயில் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டப்படுகிறது.

அதிமுக ஆட்சியில் நாங்கள் கோவில் காட்டவில்லையா? சொல்லுங்கள். 10 கல்லூரிகளுக்குள் மேல் கட்டி உள்ளோம். ஆனால் நீங்கள் அப்படியா காட்டுகிறீர்கள். பல மக்கள் எங்களிடம் இந்த புகார்களை வைத்துள்ளனர். கல்வி வேண்டாம் என்று சொல்லவில்லை. கல்வி என்பது முக்கியம். கல்வி என்பது கண் மாதிரி. அதை அரசு கட்ட வேண்டும். அரசு சொந்த பணத்தில் கட்ட வேண்டும். கோவில் பணத்தில் கட்ட கூடாது. சொந்த பணத்தில் காட்டாமல் எப்படி கோவில் பணத்தில் காட்டுகிறீர்கள்.

இப்படி ஒரு அரசாங்கம் தேவையா? இதைத்தான் மக்கள் சதிச்செயலாக் பார்க்கிறார். இப்படி ஒரு அரசாங்கம் தேவையா என்று நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button