திட்டமிட்டு தாமதப்படுத்தப்படும் வெளிநாட்டு உதவித்தொகை, எஸ்.சி./எஸ்.டி., சிறுபான்மை மாணவர்களின் கல்வியைத் தடுக்கும் ஒன்றிய பாஜக அரசு-தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
திட்டமிட்டு தாமதப்படுத்தப்படும் வெளிநாட்டு உதவித்தொகை, எஸ்.சி./எஸ்.டி., சிறுபான்மை மாணவர்களின் கல்வியைத் தடுக்கும் ஒன்றிய பாஜக அரசு-தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

திட்டமிட்டு தாமதப்படுத்தப்படும் வெளிநாட்டு உதவித்தொகை, எஸ்.சி./எஸ்.டி., சிறுபான்மை மாணவர்களின் கல்வியைத் தடுக்கும் ஒன்றிய பாஜக அரசு-தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

புதுதில்லி, ஜூலை 15 -2025 பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியின (SC/ST) ஏழை மாணவர்கள் வெளிநாடு சென்று படிப்பதற்கான உதவித் தொகை (National Overseas Scholarship – NOS) வழங்கப்பட்டு வருகிறது. 1954-1955-ஆம் ஆண்டில் துவக்கப் பட்ட இந்த (NOS) திட்டத்தின் கீழ் பட்டி யல் சாதியினர், பழங்குடியினர், குற்றப் பழங்குடிகள் என்று அறிவிக்கப் பட்ட நாடோடி பழங்குடியினர் (DNT), அரை நாடோடி பழங்குடியினர், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் அல்லது பாரம்பரிய கைவினைஞர் பிரிவுகளைச் சேர்ந்த, குடும்ப வரு மானம் ஆண்டுக்கு ரூ. 8 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
40 பேருக்கு மட்டுமே உதவித்தொகை
இந்நிலையில், 2025-26 கல்வியாண்டில் தேசிய வெளிநாட்டு உதவித்தொகைக்கான திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் வகுப்பு – பழங்குடியினர் மாணவர்கள் 106 பேர்களில் 40 பேருக்கு மட்டுமே, ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் உதவித் தொகையை வழங்கியுள்ளது.
சிறுபான்மை மாணவர்களும் தவிப்பு
இது மட்டும் அல்லாது, மௌலானா ஆசாத் தேசிய உதவித் தொகை (MANF) திட்டத்திலும் ஒன்றிய பாஜக அரசு உதவித்தொகையை வழங்காமல் உள்ளது. மௌலானா ஆசாத் தேசிய உதவித் தொகைத் திட்டமானது, கிறிஸ்துவ, இஸ்லாமிய, புத்த, ஜைன, சீக்கிய, பார்சி இன மாணவர்களுக்கு வழங்கப்படுகிற உதவியாகும். இத்திட்டத்தின் கீழ், 1400-க்கும் மேற்பட்ட முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மாணவர்கள், பல மாதங்களாக உதவித்தொகை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
487 பேர் எஸ்.சி./எஸ்.டி. மாணவர்கள் நீக்கம்
முன்னதாக, பட்டியல் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தேசிய கல்வி உதவித் தொகைக்கான பட்டியலையே வெளியிடாமல் ஏப்ரல் 2025 வரை ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தாமதிக்கப்பட்டது. முதலில் தேர்வு செய்யப்பட்ட 806 மாணவர்களில் 487 மாணவர்களின் பெயர்களை நீக்கியும் அநீதி இழைத்தது. இது நாடு முழுவதும் கண்ட னங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இந்தச் செயலானது, பட்டியல் வகுப்பினர் – பழங்குடியினர் மாணவர்களின் உயர் கல்விக்கு எதிரான சதிச்செயல் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. எஸ்.சி/எஸ்.டி ஏழை மாணவர்கள், குற்றப் பழங்குடிகள், சிறுபான்மை மாணவர்களின் கல்வி நலன்களுக்கு எதிரான இத்தகைய தீய நடவடிக்கைகளை உடனடியாக ஒன்றிய அரசு கைவிட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

