சட்டம் அறிவோம்!! ஜனநாயக காப்போம்

சட்டம் அறிவோம்- ஜனநாயகம் காப்போம்

சட்டம் அறிவோம்- ஜனநாயகம் காப்போம்

Leave clashes & Live together. சட்ட விழிப்புணர்வு ஏற்படும்போது சமூக பிரச்சனைகள் குறைகிறது.

ஆதி பொதுவுடைமை சமூகத்தில் மனிதர்கள் காடுகளில், குகையில் நடோடியாய் வாழ்ந்தார்கள். இயற்கை சீற்றம், விலங்குகள் அவர்களது அமைதியான வாழ்க்கைக்கு எதிரிகளாய் இருந்தது.

தப்பித்துக் கொள்ள பாதுகாப்பு கருதி கூட்டமாக வாழ துவங்கிய போது சமூகம் உருவானது.உழைப்பு + உபரி இதன் அபரிதமான சூழலில், வர்க்க சமூகம் உருவானது, சமூக ஒற்றுமைக்கு நல்லிணக்கம் அவசியமானது. எனினும் சமூக வாழ்க்கையில் மனிதனுக்கு மனிதனே எதிரியானான். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மோசடி ஆகிய செயல்கள் சமூக வாழ்க்கைக்கு விரோதமானது.மனிதனே இயற்கைக்கு விரோதியானான். மனிதனே விலங்குகளை அழிக்க துவங்கினான். இவற்றை கட்டுப்படுத்தவும், தடுத்து நிறுத்தவும், மானுட சமூகத்திற்கு ஓர் வடிவம் தேவைப்பட்டது,

இதன் பொருட்டே “வர்க்கப் பகைமைகளின் இணக்கம் காணாததின் விளைவாய் அரசு உருவானது “அப்படி உருவான அரசு, வர்க்க நலனுக்கு ஏற்ப உருவாக்கிய விதிமுறைகளே,சட்டங்கள் ஆனதும்

சட்டம் மனிதனுக்கு கடமைகளை வகுத்தது. இயற்கையை அழிப்பதும், விலங்குகளை அழிப்பதும் தண்டிக்க தக்க குற்றமானது.

சட்டங்களை உருவாக்கிய அரசுகள் பல வகைப்பட்டன, ஆனாலும் அவைகளை இரண்டு வகைகளில் மதிப்பீட்டுக்கு கொண்டு வர முடியும்,

தேசத்தின் வளங்களை.              தனி உடமைகளாக மையப்படுத்திய அரசு, பொதுவுடமைகளாக மையப்படுத்திய அரசு, என்ற உண்மைக்கு உலகம் முழுவதும் உள்ள நாடுகள் சான்றாவனங்களாக நம் சிந்தனைக்கு வருகின்றன,

தேசத்தின் சட்டங்கள    எதுவானாலும் மானுடம் காக்கும் சட்டங்களே மகோத்துவம்மிக்கது,,,,,

சட்டம் அறிவோம்!            ஜனநாயகம் காப்போம்!!

நீ சட்டத்தை மீறி விட்டாய் ஆகவே உன் மீது வழக்கு பதிவு செய்கிறேன், உன்னை சிறையில் அடைகிறேன் என்று சொல்லும் அரசு, இதுதான் சட்டம் என்று அனைத்து குடிமக்களுக்கும் சொல்லித் தருவதில்லை, இந்நிலை மாற வேண்டும், அனைத்து குடிமக்களுக்கும் குறைந்தபட்ச சட்டங்களை பள்ளிப் பாடங்களில் கொண்டு வந்து போதிப்பது, மானுட சமூகத்தை அறிவியல் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதற்கு பேருதவியாக இருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி உண்மை

உலகெங்கும் மிகப் பழங்காலந் தொட்டே நீதிமன்றங்கள் பல்வேறு பெயர்களில் இயங்கி வருகின்றன. கிராமங்களில் அரசமரத்தடியில் ஊர்ப் பிரமுகர்களால் நீதி சொல்லப்படுவது முதல் பல்வேறு இடங்களில் இயங்கும் வழக்காடு மன்றங்கள் வரை நீதியை நிலைநாட்டும் இடங்கள் அன்றும் இன்றும் பலதரப்பட்டவை.ஒவ்வோர் இடத்திற்கும் ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்பச் சட்டங்கள் மாறுபடவும் செய்கின்றன. தண்டனைகளிலும் மாறுபாடுகள் உண்டு.ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலத்தில் ஒரே குற்றத்தை ஆங்கிலேயர் செய்தால் தண்டனை மிகக் குறைவு. இந்தியர் செய்தால் அதே குற்றத்திற்குக் கடும் தண்டனை உண்டு. இப்படிப்பட்ட முரண்பாடுகள் எல்லோருக்குமான சம நீதியைச் சிதைத்தன.

உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளும் படியான சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டியதில் நமது திருவள்ளுவர் சிறப்பு வகிக்கிறார்.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொக்கும்

செய்தொழில் வேற்றுமையான்.

(குறள் எண் 972)எந்தக் குலத்தில் எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும், சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை வள்ளுவமும் வலியுறுத்துகிறது. குற்றம் செய்தவர் யாராயிருந்தாலும் தண்டனை ஒன்றுதான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button